சச்சின் டெண்டுல்கரின் அந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பது கடினம் – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

Ravi-Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் படைக்காத சாதனைகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் சச்சினின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுவது யாதெனில் : அவர் அடித்த 100 சதங்கள் தான். இனிவரும் எந்த ஒரு வீரராலும் 100 சதங்களை அடிக்க முடியாது என்றே பேசப்பட்டும் வருகிறது.

Sachin 1

- Advertisement -

இவ்வேளையில் அந்த சாதனையை தகர்க்க கூடிய ஒரே நபராக விராட் கோலி மட்டுமே பார்க்கப்படுகிறார். ஏனெனில் சதங்களை அடிப்பதை தனது வாடிக்கையாக வைத்திருந்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சதங்களை விளாசி முன்னேறிக்கொண்டே வந்தார். ஆனால் அவரது கரியரில் 2019 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது.

ஏனெனில் கடந்த 2019 ஆம் ஆண்டு சதமடித்த விராட் கோலி அதனைத்தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் திணறி வந்தார். அதன்பிறகு ஒரு வழியாக ஆசியக்கோப்பை தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த விராட் கோலி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்களுடன் சச்சினை பின்தொடர்ந்து வருகிறார்.

Kohli

இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 சதங்கள், ஒரு நாள் போட்டிகளில் 26 சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட் ஒரு சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்களை விராட் கோலியால் முறியடிக்க முடியும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி : விராட் கோலியால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதத்தை முறியடிப்பது என்பது ஒரு எளிதான காரியமாக இருக்காது என்ற கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்தவர் ஒருவரே என்பதை அனைவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதை யாராவது கடக்க முடியும் என்று சொன்னால் அது ஒரு பெரிய விஷயம் தான்.

இதையும் படிங்க : மலிங்காவை அடிச்சாப்போ கூட இவ்ளோ பெரியாளா லெஜெண்ட்டா வருவார்னு நினைக்கல – இந்திய வீரரை வியந்து பாராட்டும் சேவாக்

விராட் கோலி இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடுவார் அவர் சிறப்பாக விளையாடினாலும் 100 சதங்களை அடிப்பது என்பது கடினமானது என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement