மலிங்காவை அடிச்சாப்போ கூட இவ்ளோ பெரியாளா லெஜெண்ட்டா வருவார்னு நினைக்கல – இந்திய வீரரை வியந்து பாராட்டும் சேவாக்

Sehwag
- Advertisement -

டெல்லியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் நாளடைவில் மிகச் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்கு பின் அவரது இடத்தில் அவரைப்போலவே உலகின் டாப் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு ரன் மெஷினாக 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்துள்ள அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்து ஜாம்பவானாக தன்னை நிரூபித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து 10 வருடங்களாக கிட்டத்தட்ட 50 என்ற சிறப்பான பேட்டிங் சராசரியில் விளையாடி வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் நாயகனாக கிங் கோலியாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அப்படி கடந்த 15 வருடங்கள் விளையாடியதில் 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை பந்தாடியது உட்பட பல மறக்க முடியாத அற்புதமான இன்னிங்ஸ்களையும் விராட் கோலி பதிவு செய்துள்ளார். அதில் கடந்த 2012ஆம் ஆண்டு ஹோபார்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ் யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

சேவாக் வியப்பு:
ஏனெனில் அத்தொடரின் ஆரம்பத்திலேயே சில தோல்விகளை சந்தித்ததால் இலங்கை நிர்ணயித்த 321 ரன்களை 40 ஓவருக்குள் சேசிங் செய்தால் தான் போனஸ் புள்ளிகளுடன் இந்தியா ஃபைனலுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டது. அப்போது சரவெடியாக விளையாடிய விராட் கோலி 16 பவுண்டரி 2 சிக்சருடன் 133* (86) ரன்கள் விளாசி 36.4 ஓவரிலேயே இந்தியாவை வெற்றி பெற வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். குறிப்பாக அப்போது உச்சகட்ட பார்மில் இருந்த இலங்கையின் லசித் மலிங்காவை தெறிக்க விட்ட அவர் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பவுண்டரிகளாக பறக்க விட்டது யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் தங்களது மாநிலத்தைச் சேர்ந்த விராட் கோலி அன்றைய போட்டியில் மலிங்காவை அடித்த போதும் ஆரம்ப காலங்களிலும் 25000+ ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இவ்வளவு பெரிய ஜாம்பவானாக வருவார் என்று நினைக்கவில்லை என வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “யாரும் அவருடைய திறமையில் சந்தேகப்படவில்லை. ஆனால் நான் விராட் கோலி இன்று எட்டியுள்ள இந்த உச்சத்தை அடைவார் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. மற்றவர்கள் வேண்டுமானால் அப்படி நினைத்திருக்கலாம் நான் நினைக்கவில்லை”

- Advertisement -

“குறிப்பாக அந்த போட்டியில் மலிங்காவை பவுண்டரிகளாக பறக்க விட்ட போதும் நான் நினைக்கவில்லை. அந்த போட்டியில் 40 ஓவர்களில் எங்களுக்கு 280 ரன்கள் தேவைப்பட்டது என்று நினைக்கிறேன். அப்போது அவர் அற்புதமான சதமடித்து வெற்றி பெற வைத்தார். அதனால் அவரிடம் திறமைக்கு எந்த பஞ்சமும் இல்லை என்பதை நாங்கள் அனைவரும் தெரிந்திருந்தோம். ஆனால் இன்று ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு 70 – 75 சதங்கள் அல்லது 25000+ ரன்கள் அடிப்பார் என்று நினைக்கவில்லை. குறிப்பாக உங்களிடம் திறமை இருந்தும் அதை செயல்பாடுகளாக மாற்றுவது கடினம் என்பதால் அவர் மீது நான் சந்தேகமாகவே இருந்தேன்”

“அந்தளவுக்கு மனதளவில் அவரால் வலுவாக இருக்க முடியுமா? என்று நினைத்தேன். ஆனால் இன்று அவர் நான் உட்பட அனைவரையும் அவ்வாறு நினைத்தது தவறு என்று நிரூபித்து விட்டார். விராட் கோலி இன்று இந்தளவுக்கு தொட்டுள்ள உச்சங்கள் நம்ப முடியாதது. ஏனெனில் ஆரம்ப காலங்களில் அவர் சாதாரணமாகவே இருந்தார். பேட்டிங், ஃபீல்டிங் தவிர்த்து 19 வயது பையனுக்கு ஏற்றார் போல் பார்ட்டியில் ஈடுபடுவார்”

இதையும் படிங்க:நான் செலக்டரா இருந்தா கூட என் இடத்தில் அவருக்கு சான்ஸ் கொடுப்பேன் – இளம் வீரரை பெருந்தன்மையாக பாராட்டும் தவான்

“ஆனால் வளரத் துவங்கிய நாளடைவில் நாம் நீண்ட நாட்கள் விளையாட வேண்டுமெனில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். குறிப்பாக அதிக உடற்பயிற்சி செய்தால் பெரிய ரன்கள் எடுக்க முடியும் என்பதில் கவனம் செலுத்தினார். அவரது காலத்தில் நிறைய வீரர்கள் வந்து போனார்கள். ஆனால் விராட் கோலி மட்டுமே இந்திய அணியில் தனது இடத்தை வலுப்படுத்தியுள்ளார்” என்று பாராட்டினார்.

Advertisement