நான் செலக்டரா இருந்தா கூட என் இடத்தில் அவருக்கு சான்ஸ் கொடுப்பேன் – இளம் வீரரை பெருந்தன்மையாக பாராட்டும் தவான்

dhawan 1
- Advertisement -

டெல்லியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி ரொம்பவே தடுமாறிய நிலையில் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபியில் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்க கொடுத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி அதிக ரன்கள் குவித்து தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் நிரந்தர இடத்தையும் பிடித்த அவர் 2015 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் (412) எடுத்த இந்திய வீரராகவும், 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக சாதனை படைத்து தங்க பேட் விருதையும், 2018 ஆசியக் கோப்பையில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

அப்படி பொதுவாகவே அழுத்தமான பெரிய தொடர்களில் அபாரமாக செயல்பட்ட அவரை மிஸ்டர் ஐசிசி என்று இந்திய ரசிகர்களும் கொண்டாடினார்கள். இருப்பினும் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயத்துடன் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து வந்த போது கேஎல் ராகுல் அந்த இடத்தை தனதாக்கி விட்டார். மறுபுறம் 35 வயதை கடந்து விட்ட அவரும் ஐபிஎல் தொடரில் 500+ ரன்களை குவித்தாலும் அதை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்க தடுமாறினார்.

பெருந்தன்மையான தவான்:
அதனால் முதன்மை தொடர்களில் விளையாடும் வாய்ப்பை இழந்த அவருக்கு இதற்கு முன் இந்தியாவுக்காக ஆற்றிய பங்கிற்காக ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிரான தொடரில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்ட அவர் கடந்த டிசம்பரில் நடைபெற்ற வங்கதேச தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் மறுபுறம் வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் அதே வங்கதேச சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இரட்டை சதமும், சதமும் அடித்து 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

Shubman Gill

அதனால் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் அவர் நிலையான இடத்தைப் பிடிக்க துவங்கியுள்ளதால் ஷிகர் தவானுக்கு 2023 உலகக் கோப்பை உட்பட இனிமேல் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தாம் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தாலும் தமது இடத்தில் சுப்மன் கில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று ஷிகர் தவான் பெருந்தன்மையுடன் பேசியுள்ளார்.

- Advertisement -

மேலும் வங்கதேசத்துக்கு எதிராக இசான் கிசான் இரட்டை சதமடித்த போதே இது போன்ற திறமையான அடுத்த தலைமுறை இளம் வீரர்களால் இனிமேல் தமக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் தற்போது மிகச் சிறப்பாக செயல்படுவதாக நான் உணர்கிறேன். குறிப்பாக 2 வகையான கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடும் அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறார். அவர் என்னை விட தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடுகிறார்”

Shikhar-Dhawan

“எனவே ஒருவேளை நானே தேர்வுக்குழு தலைவராக இருந்தாலும் நிச்சயமாக அவருக்கு தான் வாய்ப்பு கொடுப்பேன். அதாவது ஷிகர் தவானுக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பேன். மேலும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் வந்த போது எனக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தார்கள். குறிப்பாக 2023 உலக கோப்பையை மையப்படுத்தி தயாராகுங்கள் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்”

இதையும் படிங்க:SA vs WI : என்னையா குறைச்சு எடை போட்டீங்க, ஆல் ரவுண்டராக அசத்திய தெ.ஆ வீரர் – சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

“2022ஆம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவு தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டேன். இருப்பினும் சுப்மன் கில் 2 வகையான கிரிக்கெட்டில் அசத்தும் போது என்னுடைய ஃபார்ம் சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அவர் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படுகிறார். மேலும் வங்கதேசத்துக்கு எதிராக இசான் கிசான் இரட்டை சதமடித்த போது நான் இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்பதையும் உணர்ந்தேன்” என்று கூறினார்.

Advertisement