SA vs WI : என்னையா குறைச்சு எடை போட்டீங்க, ஆல் ரவுண்டராக அசத்திய தெ.ஆ வீரர் – சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் தென்னாபிரிக்கா வென்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் எஞ்சிய 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் 1 – 1 (3) என சமனில் முடிந்தது. அதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் 3 போட்டியில் கொண்ட டி20 தொடர் மார்ச் 25ஆம் தேதியன்று துவங்கியது. செஞ்சூரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் மழையால் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா போராடி 131/8 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு குயின்டன் டீ காக் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்ற ரீசா ஹென்றிக்ஸ் 21 (12), ரிலீ ரோசவ் 10 (7), ஐடன் மார்க்ரம் 14 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 4 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 48 ரன்கள் (22) குவித்து முக்கிய நேரத்தில் இருந்தார்.

- Advertisement -

குறைச்சு எடை போடாதீங்க:
அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கிய சிசாண்டா மகாலா வெறும் 5 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 18* ரன்களை 360.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்டு மற்றும் செல்டன் காட்ரல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 132 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரண்டன் கிங் 23 (8), கெய்ல் மேயர்ஸ் 6 (2), ஜான்சன் சார்லஸ் 28 (14), நிக்கோலஸ் பூரன் 16 (7), ரொமாரியா செஃபார்டு 3 (6), ஓடீன் ஸ்மித் 5 (5) என முக்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானார்கள்.

ஆனாலும் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய கேப்டன் ரோமன் போவல் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43* (18) ரன்கள் குவித்ததால் 10.3 ஓவரில் 132/7 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் போராடி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சற்று குறைவான ரன்களை எடுத்ததால் போராடி தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக சிசாண்டா மகாலா 2 ஓவரில் 3 விக்கெட்டுகளை போர்ட்சுன் (21.00), வெய்ன் பர்ணல் (16.66), தப்ரிஸ் சம்சி (13.50) போன்ற இதர பவுலர்களை காட்டிலும் 10.50 என்ற குறைவான எக்கனாமியிலேயே எடுத்தார்.

- Advertisement -

பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் அதிரடியாக 18* (5) ரன்கள் எடுத்த அவர் விரைவில் துவங்கும் 2023 ஐபிஎல் தொடரில் காயத்தால் வெளியேறிய நியூசிலாந்து வேகப்பந்து ஆல் ரவுண்டர் கெயில் ஜமிசனுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாங்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டி20 தொடரில் நல்ல விக்கெட்டுகளை எடுத்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் பந்து வீச்சில் சற்று ரன்களை வாரி வழங்கியதால் இவரை ஏன் தேர்வு செய்தீர்கள் பேசாமல் இலங்கையின் கேப்டன் தசுன் சனாக்காவை வாங்கியிருக்கலாமே என்று சென்னை ரசிகர்களே அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

இருப்பினும் 32 வயதானாலும் சமீபத்தில் அறிமுகமாகி வெறும் 5 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவர் இந்த போட்டியில் 8வது இடத்தில் களமிறங்கி 18* ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் எடுத்து நல்ல ஆல் ரவுண்டருக்கான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:எல்லாரும் நான் குண்டா இருக்குறது பத்தி பேசுறாங்க. ஆனா நான் பண்ற பிராக்டீஸ் பத்தி தெரியுமா ? – சர்பராஸ் கான் உருக்கம்

அதனால் என்னை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நிரூபித்துள்ள அவர் 2023 தென்னாப்பிரிக்க டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஷ்ட்ர்ன் கேப் அணிக்கு கோப்பையை வெல்ல உதவியது போல் வாய்ப்பு கொடுத்தால் சென்னை அணிக்கும் 5வது கோப்பையை வெல்ல உதவ முடியும் என்பதை செயல்பாடுகளால் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement