இந்தியா ஜெயிக்கும்ன்னு சொல்ல ஆசையா தான் இருக்கு ஆனா – பாகிஸ்தான் போட்டி பற்றி ரவி சாஸ்திரி ஓப்பன்டாக்

Ravi Shastri
- Advertisement -

இலங்கையின் பல்லக்கேல் நகரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது அனைவரிடமும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இப்போட்டியில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருக்கும் பாகிஸ்தான் காயத்தை சந்திக்காத வீரர்களுடன் ஃபிட்டான அணியாக இருக்கிறது. மேலும் ஹரிஷ் ரவூப், ஷாஹின் அப்ரிடி போன்றவர்களால் இந்திய அணியை விட பாகிஸ்தானின் பவுலிங் மிகவும் பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மறுபுறம் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து நேரடியாக விளையாடுவதும் கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறியுள்ளதும் மிடில் ஆர்டரை பலவீனப்படுத்தியுள்ளது. எனவே புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டக்கூடிய ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் சொதப்பம்பட்டத்தில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.

- Advertisement -

காலம் மாறிடுச்சு:
இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றாலும் சமீப காலங்களில் பாகிஸ்தான் மிகச்சிறப்பாக செயல்பட்டு பெரிய சவாலை கொடுக்கும் அணியாக முன்னேறியுள்ளதால் கவனத்துடன் விளையாட வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். குறிப்பாக கடந்த 7 – 8 வருடங்களில் அழுத்தமான போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கும் அவர் எதிர்பார்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் விளையாடினால் தான் இந்தியா வெற்றி காண முடியும் என்று கூறியுள்ளார்.

இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா வெற்றி பெறும் அணியாக களமிறங்கும் என்று நான் சொல்வேன். ஏனெனில் கலையான வீரர்களைக் கொண்டுள்ள இந்த அணி 2011க்குப்பின் மிகவும் வலுவாக இருக்கிறது. மேலும் அனுபவமுள்ள கேப்டன் தன்னுடைய அணியை நன்கு புரிந்து வைத்துள்ளார். இருப்பினும் சமீப காலங்களில் பாகிஸ்தான் வெற்றி விகிதத்தின் இடைவெளியை குறைத்துள்ளது. குறிப்பாக கடந்த 7 – 8 வருடங்களுக்கு முன்பு பலம் மற்றும் வீரர்களின் தரம் என்று பார்த்தால் ஒரு இடைவெளி இருந்தது”

- Advertisement -

“ஆனால் பாகிஸ்தான் அதை குறைத்துள்ளது. எனவே தற்போது நல்ல அணியாக இருக்கும் அவர்களை வீழ்த்த உங்களுடைய விளையாட்டின் மேல் நீங்கள் இருக்க வேண்டும். எனவே எதிர்பார்ப்புகளை பார்க்காமல் இப்போட்டியையும் மற்றொரு போட்டியை அணுகுங்கள். ஏனெனில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தினால் மனதளவில் தடுமாற வாய்ப்பு ஏற்படலாம். பொதுவாகவே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் யார் பொறுமையாக இருந்து அழுத்தத்தை கையாள்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி செல்கிறது”

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு மட்டும் அந்த அஸ்திவாரம் கிடைச்சா இந்தியாவை அடிச்சு நொறுக்கி ஓட விட்ருவாங்க – சோயப் அக்தர் சவால் பேட்டி

“அத்துடன் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் நல்ல ஃபார்மில் இருப்பவர்களால் மட்டும் சாதிக்க முடியாது. அதாவது கடந்த 6 மாதங்களாக சுமாராக செயல்பட்ட சில வீரர்கள் இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மனதளவிலான பலத்தால் சாதிப்பார்கள். இந்த போட்டியின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியும். அதனால் அதை எங்கே எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

Advertisement