பாகிஸ்தானுக்கு மட்டும் அந்த அஸ்திவாரம் கிடைச்சா இந்தியாவை அடிச்சு நொறுக்கி ஓட விட்ருவாங்க – சோயப் அக்தர் சவால் பேட்டி

Shoaib Akhtar.jpeg
- Advertisement -

ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முக்கியமான லீக் போட்டி நடைபெற உள்ளது. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாகவும் டாப் 2 அணிகளாகவும் திகழும் இவ்விரு அணிகளில் விராட் கோலி, பாபர் அசாம் போன்ற மகத்தான வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இப்போட்டியில் கேஎல் ராகுல் காயத்தை சந்தித்துள்ளதால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருப்பதாக நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனால் ஷாஹின் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து வழக்கம் போல ரோகித் சர்மா போன்ற வலது கை பேட்ஸ்மேன்களை திணறடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என்று நிறைய கணிப்புகள் காணப்படுகின்றது.

- Advertisement -

அடித்து நொறுக்குவாங்க:
இருப்பினும் அதற்கு சவாலாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக நின்று இந்தியாவில் வெற்றிக்கு போராடுவார் என்று இந்திய ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இதற்கிடையே மழை வருவதற்கு தயாராக இருப்பதால் இப்போட்டியில் முடிவு கிடைக்குமா என்ற சந்தேகமும் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம் மட்டும் கிடைத்து முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றால் நிச்சயமாக இந்தியாவை அடித்து நொறுக்கி பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று முன்னாள் வீரர் அக்தர் அதிரடியாக பேசியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் மற்றும் அவருடைய அணியினர் தற்போது முதிர்ச்சியடைந்துள்ளனர். அதனாலேயே இதற்கு முன் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக உச்சகட்ட அழுத்தம் நிறைந்த போட்டிகளில் விளையாடியுள்ளனர். எனவே தற்போது அவர்கள் அதிக அழுத்தத்தை உணர மாட்டார்கள். எனவே ஒருவேளை இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தால் நிச்சயமாக இந்தியாவை அடித்து நொறுக்குவார்கள்”

- Advertisement -

“அதே போல இந்தியா டாஸ் வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் தடுமாற்றத்தை சந்திக்கலாம். ஏனெனில் ராட்சத மின் விளக்குகளுக்கு கீழே பந்து பெரிய அளவில் நகராது. அதனால் 2 அணிகளுக்குமே நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் ஒன்றாக விளையாட வேண்டும். குல்தீப் நிச்சயம் விளையாட வேண்டும். அதே சமயம் தற்போதைய இந்திய அணியில் விராட் கோலி 3 அல்லது 4வது இடத்தில் விளையாடுவது பற்றியும் இஷான் கிசான் ஓபனிங் அல்லது 5வது இடத்தில் விளையாடுவது பற்றியும் விவாதங்கள் காணப்படுகின்றன”

இதையும் படிங்க: IND vs PAK : ஒருவேளை இஷான் கிஷன் ஓப்பனராக இறங்கினால். இந்திய அணியில் நிகழப்போகும் -மாற்றங்கள் என்னென்ன?

“எது எப்படியிருந்தாலும் பாகிஸ்தான் வலுவான அணி என்று நான் சொல்வேன். குறிப்பாக பேட்டிங், பவுலிங் துறைகளில் அவர்கள் நன்கு செட்டிலாகியுள்ளார்கள். மேலும் அவர்களுடைய பேட்டிங்கில் கடந்த காலங்களை போல் எந்தவிதமான ஏற்ற இறக்கங்கள் தற்போது இல்லை. மொத்தத்தில் இரு அணிகளுமே ஆசிய கண்டத்தில் பேலன்ஸ் நிறைந்த அணிகளாக இருக்கிறது” என்று கூறினார். இருப்பினும் இப்போட்டி நடைபெறும் பல்லக்கேல் மைதானத்தில் சேசிங் செய்த அணிகளே அதிகமாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement