IND vs PAK : ஒருவேளை இஷான் கிஷன் ஓப்பனராக இறங்கினால். இந்திய அணியில் நிகழப்போகும் -மாற்றங்கள் என்னென்ன?

Ishan-Kishan
- Advertisement -

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் முழு உடற்தகுதி இல்லாததன் காரணமாக முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்தார். வலைப்பயிற்சியின் போது அசவுகரியத்தை சந்தித்த கே.எல் ராகுல் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கு பிறகு அணியில் இணைய இருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு வரும் கே.எல் ராகுல் முழுஉடற்தகுதி இன்றி களமிறங்கினால் மேலும் அது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கிற கருத்தினை முன்னிறுத்தி முன்னெச்சரிக்கை காரணமாகவே அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனே களம் இறங்குவார் என்று தெரிகிறது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலும் துவக்க வீரராகவே விளையாடி பழக்கப்பட்ட இஷான் கிஷன் இன்றைய போட்டியில் பிளேயிங் லெவனில் துவக்க வீரராக இடம் பிடித்தால் அணியில் என்னென்ன மாற்றங்கள் பேட்டிங் வரிசையில் நிகழும் என்பதையே இந்த பதிவில் காண உள்ளோம்.

அந்த வகையில் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கினால் இடது கை, வலது கை வீரர்கள் துவக்க வீரர்களா களமிறங்குவார்கள். அதேவேளையில் மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார். அதே போன்று மூன்றாவது இடத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி நான்காவது இடத்திற்கும் தள்ளப்படுவார்.

- Advertisement -

மேலும் நான்காவது இடத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது இடத்திற்கும் தள்ளப்படுவார்கள். இப்படி இஷான் கிஷன் ஒருவர் அணிக்குள் வந்தால் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை முழுவதுக்குமே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

இதையும் படிங்க : கடைசி 22 மேட்ச்ல 10 விக்கெட் தானா? ஜடேஜாவிடம் உள்ள வீக்னஸ் – ரோஹித் சர்மா என்ன பண்ணுவாரோ பாவம்

அதையெல்லாம் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இருப்பினும் இந்திய அணியில் தற்போது பவுலிங் மற்றும் பேட்டிங் என மிக பலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதினால் நிச்சயம் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement