
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது பிரிஸ்பேன் நகரில் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியானது வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற இந்த மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சில் 425 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆனால் இந்திய அணி தங்களது முதல் இனிங்சில் 260 ரன்கள் மட்டுமே குவித்தது. ஒரு கட்டத்தில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெறும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மழை காரணமாக முற்றிலும் போட்டி தலைகீழாக மாறியது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்சின் போது ஒரு கட்டத்தில் இந்திய அணி பாலோ ஆனை நோக்கி நகர்ந்தது.
அவ்வேளையில் அதனை தவிர்க்க கடைசி விக்கெட்டிற்கு 36 ரன்கள் தேவை என்ற கட்டாய நிலை இருந்தது. அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி அந்த 36 ரன்களை சேர்த்து இந்திய அணியை ஃபாலோ ஆன் ஆக விடாமல் காப்பாற்றினார். அப்போது பாலோ ஆனை இந்திய அணி கடந்த பிறகு டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த விராட் கோலி மற்றும் கம்பீரும் அதனை உற்சாகமாகக் கொண்டாடியிருந்தனர்.
ஏனெனில் பாலோ ஆனை இந்தியா கடந்ததால் ஆஸ்திரேலிய அணியானது மீண்டும் பேட்டிங் செய்ய வரும் என்பதால் நிச்சயம் இந்த போட்டியின் தோல்வியிலிருந்து இந்திய அணி தப்பிக்கும் என்பதாலேயே அவர்கள் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களது இந்த கொண்டாட்டம் குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில் :
அது போன்ற நேரத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டியது அவசியம். ஏனெனில் கடைசி விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்து பாலோ ஆனை கடந்தது மிகச் சிறப்பான ஒன்று. அந்த நேரத்தில் நாம் அப்படி கொண்டாடினால் நிச்சயம் அந்த கொண்டாட்டம் அடுத்த போட்டியின் போது நம்மை வெற்றியை நோக்கி தள்ளும். கடந்த முறை சிட்னி டெஸ்டில் கூட அஸ்வின், விஹாரி ஆகியோர் கடைசி செஷனில் ஜோடி சேர்ந்து போட்டியை டிராவில் முடித்தனர்.
இதையும் படிங்க : கேஎல் ராகுல் திறமைக்கு இதெல்லாம் கம்மி.. அடுத்த 5 வருஷத்துல அது 50ஆக மாறும்.. ஹர்பஜன் நம்பிக்கை
அந்த மிகச் சிறப்பான செயல்பாடுதான் அதற்கடுத்த போட்டியை இந்தியா வெல்ல உதவியது. அதேபோன்று கோலி மற்றும் கம்பீர் ஆகியோரது இந்த செயல் அடுத்த போட்டியில் இந்திய அணி வெல்ல உதவும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.