ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதனுடைய முதல் போட்டியில் வென்ற இந்திய அணியை 2வது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்த நிலையில் 3வது போட்டி டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்க உள்ளது.
முன்னதாக இந்தத் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட நட்சத்திர பேட்ஸ்மேன்களே தடுமாறி வருகிறார்கள். ஆனால் கேஎல் ராகுல் 37, 77, 33, 84 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடிய இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார். இத்தனைக்கும் சமீப காலங்களில் சுமாராக விளையாடியதால் அவரை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டுமென விமர்சனங்கள் எழுந்தன.
திறமையான ராகுல்:
ஆனால் ரோகித் சர்மாவுக்கு பதிலாக இத்தொடரில் துவக்க வீரராக விளையாடும் ராகுல் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை அற்புதமாக தவற விட்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கே.எல் ராகுல் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 34.54 என்ற பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். ஆனால் அவருடைய தரத்திற்கும் திறமைக்கும் அது குறைவு என்று ஹர்பஜன் சிங் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் இங்கிருந்து ஓப்பனிங் இடத்தை இறுக்கமாக பிடித்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 5 வருடத்தில் ராகுல் 50 சராசரியை தாண்டுவார் என்றும் ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு. “நல்ல திறமையை கொண்டுள்ள ராகுல் சரியான பேட்ஸ்மேன். அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவையான டெக்னிக் இருக்கிறது”
ஹர்பஜன் நம்பிக்கை:
“பந்தை எப்படி தவற வேண்டும் என்பதை அறிந்துள்ள அவரிடம் அனைத்து விதமான ஷாட்டுகளும் உள்ளது. வேகம, சுழல் ஆகிய பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளையும் நன்றாக அடிக்கிறார். எனவே அவருடைய சராசரி 20 – 25 அளவு உயர்வதை பார்க்க விரும்புகிறேன். அவருடைய தரத்திற்கும் திறமைக்கும் அது 50 – 55ஆக இருக்க வேண்டும். எனவே இங்கிருந்து அவரிடம் பெரிய முன்னேற்றத்தை காணலாம்”
இதையும் படிங்க: எல்லாத்தையும் கொடுத்த இந்தியாவை மறந்து கோலி இதை செய்யலாமா? உறுதி செய்த கோச்.. ரசிகர்கள் ஆதங்கம்
“நிறைய மேடு பள்ளங்களை கொண்ட அவர் காயத்தாலும் நீண்ட காலம் விளையாடவில்லை. இருப்பினும் தற்போது தொடர்ச்சியாக விளையாடும் அவருக்கு ஓப்பனிங் சரியான இடம். எனவே அவருடைய கேரியர் இங்கிருந்து மேலே செல்வதை நாம் எதிர்பார்க்கலாம். அடுத்த 5 வருடத்திற்கு பின் ராகுல் 50 – 55 சராசரியை கொண்டிருப்பதைப் பற்றி நாம் பேசுவோம்” என்று கூறினார்.



