எல்லாத்தையும் கொடுத்த இந்தியாவை மறந்து கோலி இதை செய்யலாமா? உறுதி செய்த கோச்.. ரசிகர்கள் ஆதங்கம்

Rajkumar Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி அசத்தத் துவங்கினார். அப்போதிலிருந்து ஓரளவு தொடர்ச்சியாக அசத்தி வரும் அவர் 26000 ரன்கள் 81 சதங்கள் அடித்து இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் நிறைய உலக சாதனைகளையும் படைத்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக வலம் வருகிறார். அதனால் விராட் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். அதனால் எங்கே சென்றாலும் அவரை ரசிகர்கள் பட்டாலும் சூழ்ந்து கொள்வது வாடிக்கையாகும்.

- Advertisement -

விராட் கோலியின் முடிவு:

அதை தவிர்ப்பதற்காக சமீப காலங்களில் இந்தியாவுக்காக விளையாடிய நேரங்கள் போக விராட் கோலி லண்டனுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அங்கிருந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமல் நேரடியாக களமிறங்கும் அவர் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வருகிறார். அதற்கு ஏற்கனவே சில முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை வெளிப்படுத்தினர். முன்னதாக ஓய்வுக்கு பின் விராட் கோலி நிரந்தரமாக லண்டனுக்கு குடியேற உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

அதை தற்போது விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் உறுதி செய்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் விராட் கோலி தன்னுடைய குழந்தை மற்றும் அனுஷ்கா சர்மாவுடன் லண்டனுக்கு நகர திட்டமிட்டுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி விரைவில் நகர உள்ளார். தற்போது அவர் கிரிக்கெட்டை தாண்டி தன்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரத்தை செலவிடுகிறார்” என்று கூறினார்.

- Advertisement -

இந்தியாவை மறக்கலாமா:

இதை அறியும் ஒரு தரப்பு ரசிகர்கள் அனைத்தையும் கொடுத்த தாய் நாட்டை மறந்து விட்டு விராட் கோலி லண்டன் செல்லலாமா? என்று சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். உண்மையில் திறமையால் சாதித்த விராட் கோலி வெளிநாட்டுக்கு குடிபெயர்வது அவருடைய தனிப்பட்ட விருப்பமாகும். இருப்பினும் லண்டனுக்கு குடிபோகும் அளவுக்கு அவருடைய திறமைக்கான அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் வசதிகளையும் இந்தியாவும் இந்திய மக்களும் கொடுத்தனர்.

இதையும் படிங்க: கமின்ஸை பறக்க விட்ட உங்களுக்கு அது நல்லாவே தெரியும்.. பும்ராவை பாராட்டிய சுந்தர் பிச்சை, எலான் மஸ்க்

மேலும் அவரை விட மிகப்பெரிய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பின்பும் இந்தியாவிலேயே எதையும் மறக்காமல் இருக்கிறார். அந்த வகையில் விராட் கோலியும் தொடர்ந்து இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். அதையும் தாண்டி லண்டனுக்கு சென்றால் அது விராட் கோலியின் விருப்பமாகும். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement