செமி பைனலில் விளையாட டிகே – பண்ட் ஆகியோரில் சரியானவர் யார்? 2 காரணங்களை விளக்கும் ரவி சாஸ்திரி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் வலுவான இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா அதில் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு செல்ல போராட உள்ளது.

Dinesh-Karthik

- Advertisement -

அத்துடன் கடந்த 2014 முதல் இதே போன்ற நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறிய தவறை இம்முறை செய்யாமல் சிறப்பாக செயல்படுமாறு இந்திய அணிக்கு நிறைய முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துக் வருகிறார்கள். அந்த வகையில் 100% சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பதிவு செய்யக்கூடிய நாக் அவுட் சுற்றுக்கு முன்பாக திருத்த வேண்டிய சில குறைகளில் மிடில் ஆர்டரில் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்படப் போவது யார் என்ற கேள்வி நிலவுகிறது.

அதில் அறிமுகமானது முதல் இப்போது வரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தினாலும் டி20 கிரிக்கெட்டில் சொதப்பலாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக 2022 ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து 37 வயதில் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து அசத்தலாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்புளிக்கப்பட்டது. ஆனால் பினிஷிங் செய்வதற்காகவே தேர்வு செய்யப்பட்ட அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே விராட் கோலி போராடிக் கொண்டு வந்த வெற்றியை கடைசி ஓவரில் சொதப்பி தாரைவார்க்க பார்த்தார்.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

சாஸ்திரியின் தேர்வு:
அதே போல் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான வென்றாக வேண்டிய போட்டியிலும் சிறப்பாக செயல்பட தவறினார். மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பியதால் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் அபாரமாக செயல்பட்டு “காபா” போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிஷப் பண்டுக்கு வாய்ப்பளிக்குமாறு மீண்டும் கோரிக்கைகள் எழுந்தன.

- Advertisement -

அந்த நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் மீண்டும் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் முக்கியமான அரையிறுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் நிலவும் இடதுகை பேட்ஸ்மேன் பஞ்சத்தை போக்க தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி ஆதரவு கொடுத்துள்ளார்.

Shastri

அதைவிட இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி நடைபெறும் அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஸ்கொயர் பவுண்டரிகள் சிறியது என்பதால் அதை பயன்படுத்தி ரன்களை குவிக்க இடது கை பேட்ஸ்மேன் அவசியமென்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தினேஷ் கார்த்திக் நல்ல அணி வீரர். ஆனால் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக என்று பார்க்கும் போது அவர்களது பந்து வீச்சை சமாளிக்க உங்களுக்கு ஒரு மேட்ச் வின்னர் இடது கை பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது. மேலும் இங்கிலாந்துக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே ரிசப் பண்ட்டை நான் தேர்வு செய்வேன்”

- Advertisement -

“ஏனெனில் ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவில் அசத்தியுள்ளார் என்பது மட்டுமல்லாமல் அரை இறுதியில் துருப்புச் சீட்டாக செயல்படும் தன்மை கொண்டவர். அதிலும் குறிப்பாக போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானத்தில் ஸ்கொயர் பவுண்டரிகள் மிகவும் சிறியது. எனவே அந்த இடத்தில் ஒரு இடது பேட்ஸ்மேன் இருந்தால் இங்கிலாந்து பந்து வீச்சுக்கு தொந்தரவு கொடுக்க முடியும்.

இதையும் படிங்க : இந்த டி20 வேர்ல்டுகப் தொடர்நாயகன் விருதினை ஜெயிக்கப்போவது இவர்தான். கோலி கிடையாது – கம்பீர் கருத்து

அதே சமயம் இந்திய அணியில் அதிகமாக வலது கை பேட்ஸ்மேன்களை கொண்டிருந்தால் எதிரணிக்கு சிரமமின்றி பந்து வீசும் சாதகத்தை நீங்கள் உருவாக்குவீர்கள். இங்கிலாந்து அணியில் நல்ல பந்து வீச்சு உள்ளது. அதே போல் பேட்டிங்கிலும் வலது – இடது என 2 வகையான கலவைகள் உள்ளது”என்று கூறினார்.

Advertisement