IPL 2023 : இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்கப்போவது இவங்கதான் – ரவி சாஸ்திரி கணிப்பு

Ravi-Shastri
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது மே மாதம் முதல் வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் முன்னேற்றத்தை பெறுவதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. மேலும் இன்னும் குறிப்பிட்ட அளவிலான போட்டிகளே எஞ்சியுள்ளதால் இந்த தொடரின் மீதான சுவாரசியமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

IPL-2023

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் குஜராத் அணி இந்த தொடரில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அதன்படி தற்போது நடப்பு சாம்பியனான குஜராத் அணி முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இனி வரும் போட்டிகளிலும் முடிவுகள் மாறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் மாற்றம் இருக்கும் என்பதால் இந்த கடைசி கட்ட போட்டிகள் தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும், வர்ணனையாளர்களும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

GT

அந்த வகையில் இந்த ஆண்டு எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

தற்போதைய பார்ம் மற்றும் அணியின் வலிமை படி பார்க்கையில் குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன். ஏனெனில் குஜராத் அணி தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு நல்ல வலுவான அணியாகவும் உள்ளது. அந்த அணி எந்த ஒரு குறிப்பிட்ட வீரர்களையும் சார்ந்து இல்லை.

இதையும் படிங்க : ரசிகர்களை கவர்ந்த அரிதான பார்ட்னர்ஷிப் – ஸ்டீவ் ஸ்மித் ஏமாற்றினாலும் மாஸ் காட்டிய புஜாரா, ஃபைனலுக்கு தயார்

குஜராத் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி போட்டிகளை வெற்றி பெற்று கொடுப்பதால் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் இம்முறையும் கோப்பையை வெல்லும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement