ரசிகர்களை கவர்ந்த அரிதான பார்ட்னர்ஷிப் – ஸ்டீவ் ஸ்மித் ஏமாற்றினாலும் மாஸ் காட்டிய புஜாரா, ஃபைனலுக்கு தயார்

Pujara County Steve Smith
- Advertisement -

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் செடேஸ்வர் புஜாரா கேப்டனாக விளையாடி வருகிறார். கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடந்த வருடம் அதிரடியாக கழற்றி விடப்பட்ட போது அந்த அணிக்காக சதங்களையும் இரட்டை சதங்களையும் விளாசி பழைய ஃபார்முக்கு திரும்பி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடரில் தம்மை யாரும் வாங்காத நிலையில் ஜூன் மாதம் இதே லண்டனில் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயாராகும் வகையில் இந்த கவுண்டி தொடரில் புஜாரா விளையாடி வருகிறார். இந்த சீசனில் ஏற்கனவே களமிறங்கிய முதல் 4 போட்டிகளில் 2 சதங்களை அடித்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவரது தலைமையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் 3 போட்டிகளில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

- Advertisement -

மாஸ் காட்டிய புஜாரா:
நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஜாம்பவான்களாக போற்றப்படும் இவர்கள் இதற்கு முன் தங்களது நாட்டுக்காக எதிரெதிர் அணிகளில் மட்டுமே விளையாடி வந்ததை அனைவரும் பார்த்துள்ளோம். சொல்லப்போனால் இத்தனை நாட்களாக எதிரெதிர் அணிகளில் விளையாடிய தாங்கள் ஒன்றாக இணைந்து விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக அவர்களும் தெரிவித்தனர். அந்த நிலையில் வோர்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிராக மே 4ஆம் தேதி துவங்கிய கவுண்டி போட்டியில் டாஸ் வென்ற புஜாரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வோர்செஸ்டெர்ஷைர் சுமாராக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 264 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஆடம் ஹோஸ் மற்றும் மேத்தியூ வெய்ட் தலா 59 ரன்கள் எடுத்த நிலையில் சசக்ஸ் சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் 7 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய சசக்ஸ் அணிக்கு அலெஸ்டர் ஓர் 34, டாம் கிளார்க் 12, டாம் அஸ்லோப் 13 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 67/3 என தடுமாறிய தனது அணியை நங்கூரமாக நின்று தூக்கி நிறுத்த முயற்சித்த புஜாராவுடன் அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய ஸ்டைலில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.  ரசிகர்களுக்கு அரிதான காட்சியைப் போல் முதல் முறையாக பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிய அந்த ஜோடியில் புஜாராவுடன் 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் 30 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

அந்த நிலையில் வந்த ஜேம்ஸ் கோல்ஸ் 14, ஓலிவர் கார்ட்டர் 23 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் அடுத்து வந்த ஃபின் ஹஸ்டன்-பிரண்டிஸ் 7வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் இணைந்து 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 54 (64) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறிய புஜாரா சதமடித்து 19 பவுண்டரி 1 சிக்ருடன் 134* (180 ரன்கள் விளாசிய போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் சசக்ஸ் 104 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:PAK vs NZ : கிங் கோலி, ரிச்சர்ட்ஸ், ஹாசிம் அம்லாவின் ஆல் டைம் சாதனை உடைத்த பாபர் அசாம் – புதிய இரட்டை உலக சாதனை

ஏற்கனவே இந்த சீசனில் 4 போட்டிகளில் கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களை அடித்திருந்த புஜாரா இந்த சதத்தையும் சேர்த்து தற்போது ஹாட்ரிக் சதங்களை விளாசி கவுண்டி தொடரில் தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஆரம்பம் முதலே கவுண்டி தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக உச்சகட்ட ஃபார்மில் விளையாடி இந்தியாவுக்கு கோபியை வெல்லும் லட்சியத்தில் தயாராக இருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement