
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அப்போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே அரை சதம் கூட அடிக்கவில்லை. அதனால் ஜடேஜா 61* ரன்கள் எடுத்து டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து போராடியும் இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் கருண் நாயர் பந்தை தவறாக படித்து விக்கெட்டை தாரை வார்த்தது திருப்பு முனையாக அமைந்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட்டை தக்க சமயத்தில் ரன் அவுட் செய்த பென் ஸ்டோக்ஸ் 2வது இன்னிங்ஸில் தொடர்ந்து 10 ஓவர்கள் வீசியது இங்கிலாந்து வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்ததாகவும் சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
விராட், ரோஹித் இல்லாததால் படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத்தொடரில் இளம் இந்திய அணி சிறப்பாக விளையாடுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அதனால் அதிர்ஷ்டம் சரியாக கிடைத்திருந்தால் இந்நேரம் 3 – 0* (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றிருக்கும் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “40/1 என்ற சூழ்நிலையில் இருந்த போது கருண் நாயரிடம் கவனச் சிதறல் ஏற்பட்டது என்று நினைக்கிறேன்”
“நேராக வந்த ஒன்றுமற்ற பந்தை அவர் விட்டது இங்கிலாந்து கம்பேக் கொடுப்பதற்கான கதவைத் திறந்தது. அந்த விக்கெட் விழுந்த டைமிங் அனைத்தையும் தலைகீழாக மாற்றியது. 4வது நாளில் இந்திய டாப் ஆர்டர் கொஞ்சம் மனதளவில் திடமாக நின்று கடினமாக விளையாடியிருந்தால் வெற்றி இந்தியாவின் பக்கம் வந்திருக்கும். அது 2021 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை எனக்கு நினைவுப்படுத்தியது”
“ஆனால் இம்முறை இங்கிலாந்து வென்றது. கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்திருக்கும். இப்போதும் எதுவும் வேண்டாமானாலும் நடக்கலாம். ஒருவேளை அடுத்தப் போட்டியில் இந்தியா கம்பேக் கொடுத்தால் 5வது போட்டி திரில்லராக அமையும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஒன்னுமே இல்லாத பந்தில் அவர் அவுட்டானது தான் இந்திய அணிக்கு தோல்வியை தந்தது – ரவி சாஸ்திரி காட்டம்
அவர் கூறுவது போல முதல் போட்டியில் 7 கேட்சகள் தவற விடாமல் இருந்திருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்காது. 3வது போட்டியில் ரிஷப் பண்ட் ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தாலும் இந்தியா குறைந்தது 30 – 50 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும். அதுவே இந்தியாவின் தோல்வியைத் தவிர்த்து 3 – 0* என்ற கணக்கில் தொடரை வெல்ல உதவியிருக்கும் என்றால் மிகையாகாது.