ஒன்னுமே இல்லாத பந்தில் அவர் அவுட்டானது தான் இந்திய அணிக்கு தோல்வியை தந்தது – ரவி சாஸ்திரி காட்டம்

Ravi Shastri
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்ததால் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருந்தன.

ஒன்னுமே இல்லாத பந்தில் அவர் அவுட்டானது ரொம்ப மோசம் : ரவி சாஸ்திரி

அந்த வகையில் கடந்த 8 ஆண்டுகளாகவே இந்திய அணியின் காம்பேக் வாய்ப்பிற்காக காத்திருந்த கருண் நாயருக்கு இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் உள்ளூர் தொடரில் மலை போல் ரன்களை குவித்தது மட்டுமின்றி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் அவர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு தனது சிறப்பான செயல்பாட்டை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 40 ரன்கள் குவித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது முக்கியமான வேளையில் 33 பந்துகளை மட்டுமே சந்தித்து 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அவரது விக்கெட் விழுந்ததும் இந்திய அணி சரிவை நோக்கி செல்ல துவங்கியது. இந்நிலையில் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் : கருண் நாயர் இரண்டாவது இன்னிங்சின் போது இந்திய அணி இலக்கை விரட்டும் போது அவரது பொறுப்பை உணர்ந்து விளையாடி இருக்க வேண்டும். ஆனால் கவனக்குறைவாக இருந்த அவர் எதுவுமே இல்லாத பந்தில் அதுவும் நேராக வந்த பந்தினை கால் பகுதியில் வாங்கி எல்.பி முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அவரது அந்த விக்கெட் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கான கதவுகளை திறந்து விட்டது. இப்படி போட்டியின் முக்கியமான வேளையில் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாட வேண்டிய அவரே இங்கிலாந்து அணியின் வெற்றிக்கான கதவினை திறந்து வைத்தார் என ரவி சாஸ்திரி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க : ஒழுங்கா பாதி சம்பளத்தை துருவ் ஜுரேலுக்கு குடுத்துடுங்க.. ரிஷப் பண்டை கிண்டல் செய்த – தினேஷ் கார்த்திக்

ஏற்கனவே இந்த தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கருண் நாயரை பலரும் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறிவரும் வேளையில் ரவி சாஸ்திரியும் இப்படி ஒரு கருத்தினை கூறியுள்ளதால் அடுத்த போட்டியில் அவரை வெளியேற்றிவிட்டு சாய் சுதர்சன் அல்லது துருவ் ஜுரேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement