ஒழுங்கா பாதி சம்பளத்தை துருவ் ஜுரேலுக்கு குடுத்துடுங்க.. ரிஷப் பண்டை கிண்டல் செய்த – தினேஷ் கார்த்திக்

DK and Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

பாதி சம்பளத்தை துருவ் ஜுரேலுக்கு குடுங்க : தினேஷ் கார்த்திக்

இந்நிலையில் இந்த போட்டியின் போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பண்ட் கீப்பிங் செய்யாமல் வெளியேறியதால் துருவ் ஜுரேல் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக கீப்பிங் பணியை மேற்கொண்டார். இருந்தாலும் முதலில் இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் 112 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி 2 சிக்சர் என 74 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதோடு இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்த அவர் 12 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த இங்கிலாந்து தொடர் முழுவதுமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் மூன்றாவது போட்டியின் போது இப்படி காயம் அடைந்துள்ளதால் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும் அடுத்த போட்டிக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் இடைவெளி உள்ளதால் நிச்சயம் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் நேரலையில் ரிஷப் பண்ட் குறித்து கிண்டல் செய்த ஒரு விடயம் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது ரிஷப் பண்ட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இன்னிங்சில் 34 ஓவர்கள் மட்டுமே கீப்பிங் செய்த வேளையில் அதன்பிறகு முற்றிலுமாக துருவ் ஜுரேலே விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.

- Advertisement -

இதனை கவனித்த தினேஷ் கார்த்திக் போட்டியின் நான்காம் நாள் பேசிக் கொண்டிருந்த வேளையில் : ரிஷப் பண்ட் இந்த போட்டி முடிந்ததும் அவருடைய இந்த டெஸ்ட் போட்டிக்கான சம்பளத்திலிருந்து பாதியை துருவ் ஜுரேலுக்கு கொடுத்து விட வேண்டும் என்று கூறினார். இதற்கு காரணம் யாதெனில் : ஐசிசி விதிமுறைப்படி களத்தில் இருக்கும் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பர் உள்ளே வரலாம்.

இதையும் படிங்க : அம்பயர் தான் அப்படின்னா.. டிஆர்எஸ் அதுக்கு மேல இந்தியாவுக்கு சதியா இருக்கே.. சுனில் கவாஸ்கர் கேள்வி

அந்த வகையில் உள்ளே வந்த துருவ் ஜுரேல் போட்டியின் பெரும்பாலான நேரம் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இப்படி போட்டியில் இடம் பெறாமல் வெளியிலிருந்து உள்ளே வந்த அவர் கிட்டத்தட்ட போட்டி முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்ததால் அவருக்கு பாதி தொகையை ரிஷப் பண்ட் வழங்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கிண்டல் செய்யும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement