நீங்க தூஸ்ராவுக்கு ரெடியா இருந்தா.. அஸ்வின் எக்ஸ்ட்ரா 2 பிளான் வெச்சுருப்பாரு.. இங்கிலாந்தை எச்சரித்த சாஸ்திரி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் இங்கிலாந்து விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் வலுவான இந்தியாவை அதன் சொந்த 12 வருடங்கள் கழித்து தோற்கடித்து சாதனை படைக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.

மறுபுறம் அதற்கு சவாலை கொடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் இந்தியா காண்பிக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். முன்னதாக இத்தொடரில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய ஸ்பின்னர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக எதிர்கொள்வற்கான திட்டத்தை வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தூஸ்ரா திட்டம்:
குறிப்பாக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசக்கூடிய தூஸ்ரா, கேரம் பால் போன்ற வித்தியாசமான பந்துகளை எதிர்கொள்ள தேவையான திட்டத்தை வைத்திருப்பதாக இங்கிலாந்து அணியினர் சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இத்தொடரில் தூஸ்ரா பந்துகளை எதிர்கொள்ள இங்கிலாந்து தயாராக இருந்தால் அஸ்வின் தீஷ்ரா, சௌதா போன்ற புதிய திட்டங்களுடன் வருவார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

நேற்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் வித்தியாசமான முடிவெட்டுடன் வந்திருந்த அஸ்வினுக்கு முன்பாக இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இத்தொடரில் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சிக்க உள்ளதாக அஸ்வின் தெரிவித்திருந்தார். தற்போது அவர் இது போன்ற முடி வெட்டை கொண்டுள்ளார். அதனால் அவருடைய மூளை சுதந்திரமாகியுள்ளது”

- Advertisement -

“அதற்குள் காற்று நன்றாக செல்லும் என்ற சூழ்நிலையில் இப்போது அவர் என்ன நினைப்பார் என்று நீங்கள் கற்பனை செய்யலாம்? ஒருவேளை அவர் தீஸ்ரா, சௌதா போன்ற பந்துகளை வீசுவதற்கான திட்டத்தை வைத்திருக்கலாம். இங்கிலாந்து அதை மிக விரைவாக அறிவார்கள். இந்த தொடரில் இளம் வீரர்களுக்கான என்னுடைய ஆலோசனை என்னவெனில் இந்த மகத்தான விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி கிடையாது”

இதையும் படிங்க: யாருக்கு தான் அந்த ஆசை இருக்காது? நீங்களே சொல்லுங்க.. வெளிப்படையாக தனது விருப்பத்தை தெரிவித்த – ஜஸ்ப்ரீத் பும்ரா

“இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து அணியை சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் மெக்கல்லம் இருக்கிறார். இந்த தொடருக்காக இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள். நீண்ட நாட்கள் கழித்து 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. அதில் நியாயமாக கடினமாக விளையாடுங்கள். விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுங்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கு பின் நேர்மைத் தன்மையுடன் போராடுங்கள் என்று கூறினார்.

Advertisement