யாருக்கு தான் அந்த ஆசை இருக்காது? நீங்களே சொல்லுங்க.. வெளிப்படையாக தனது விருப்பத்தை தெரிவித்த – ஜஸ்ப்ரீத் பும்ரா

Bumrah
- Advertisement -

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 25-ஆம் தேதி நாளை ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெற இருக்கும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது.

- Advertisement -

அதில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக உங்களுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜஸ்ப்ரீத் பும்ரா கூறுகையில் :

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எப்போதுமே சிறந்த ஒன்று. அதில் கேப்டன் பதவியை ஏற்று அணியை வழி நடத்துவது என்பது அற்புதமான ஒரு உணர்வு. ஏற்கனவே நான் கேப்டன் பதவியை ஏற்று விளையாடிய அந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியிருந்தால் கூட கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

- Advertisement -

எந்த ஒரு வீரருக்குமே கேப்டன்சி செய்வது என்பது விருப்பமான ஒன்றுதான். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார் தான் செய்ய மாட்டார்கள்? எனக்கும் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன்சி செய்ய வேண்டிய ஆசை இருக்கிறது. ஆஸ்திரேலியாலில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சாளராக இருந்து கொண்டு டெஸ்ட் அணியை வழி நடத்துகிறார்.

இதையும் படிங்க : 2023 உ.கோ ஃபைனல் தோல்வியை பாத்தாவது திருந்துங்க.. இந்திய அணியை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு என ஒரு புத்திசாலித்தனம் உள்ளது. அவர்கள் கடினமான சூழ்நிலையில் கூட அணியை சிறப்பாக வழி நடத்துவார்கள் என்பது என்னுடைய ஒரு நம்பிக்கை என ஜஸ்ப்ரீத் பும்ரா வெளிப்படையாக தனது கேப்டன்சி ஆசை குறித்து பேசி உள்ளார். ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்ட பும்ரா அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement