2023 உ.கோ ஃபைனல் தோல்வியை பாத்தாவது திருந்துங்க.. இந்திய அணியை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. அத்தொடரில் வலுவான இந்தியாவை அவர்களின் சொந்த ஊரில் தோற்கடிக்கும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ரன்கள் குவிக்கும் தங்களுடைய புதிய யுக்தியை பயன்படுத்தி இந்திய மண்ணில் சாதிக்கும் லட்சியத்துடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

அதற்கு பதிலடி கொடுத்து இத்தொடரையும் வென்று 2012க்குப்பின் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக இத்தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை வேண்டுமென்றே அமைத்தால் அது இந்தியாவுக்கு தோல்வியை கொடுக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் எச்சரித்திருந்தார்.

- Advertisement -

உலகக்கோப்பை தோல்வி:
ஏனெனில் முதல் நாளிலிருந்தே சுழலுக்கு சாதகமாக பிட்ச் இருந்தால் அதில் சிறப்பாக விளையாடி இந்திய பேட்ஸ்மேன்களை ஆல் அவுட் செய்ய ஜேக் லீச் போன்ற தரமான ஸ்பின்னர்கள் தங்களிடமும் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒருவேளை சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்தால் அது இத்தொடரில் தோல்வியை கொடுக்கலாம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.

குறிப்பாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் சுழலுக்கு சாதகமான பிட்ச் தோல்வியை கொடுத்ததை மறந்து விடாதீர்கள் என்று இந்தியாவை எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுழலுக்கு அதிக சாதகமாக இருக்கக்கூடிய மைதானங்கள் தயாரிக்கப்படுமா என்பது இத்தொடருக்கு முன்பாக இருக்கும் மிகப்பெரிய கேள்வியாகும். இதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன்”

- Advertisement -

“பிட்ச் மீதான உங்களின் ஆவேசத்தால் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றீர்கள். உங்களது சாதகமான பிட்ச் அமைத்தது ஃபைனலில் தோல்வியை கொடுத்தது. அது ஒருநாள் போட்டி. ஆனால் இது டெஸ்ட் போட்டி என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் இது வடிவத்தைப் பொறுத்ததல்ல. அது போன்ற மைதானங்களால் நீங்கள் திருப்தியடைகிறீர்கள். எனவே போட்டியின் வெற்றி தரமாக கிடைக்கும் அளவுக்கு பிட்ச் இருக்க வேண்டும் என்று மட்டும் மைதான பராமரிப்பாளருக்கு அறிவுறுத்தலை கொடுங்கள்”

இதையும் படிங்க: போட்டியே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள இப்படி பிரச்சனையா? முதல் டெஸ்டில் இருந்து வெளியேறிய வீரர் – ஸ்டோக்ஸ் விரக்தி

“அது தார் ரோட் போல இருக்கக்கூடாது. தற்போதைய நிலைமையில் இந்தியா தொடரை வெல்வதற்கு வாய்ப்புள்ளது. அவர்கள் 4 – 0, 5 – 0 அல்லது 4 – 1 என வெல்வார்களா என்பது மட்டுமே கேள்வியாகும். மேலும் இங்கிலாந்து எந்த போட்டியை வெல்வார்கள். எப்படி 20 விக்கெட்டுகளையும் எடுத்து வெல்வார்கள் என்பது கேள்வியாகும். ஏனெனில் அவர்களுடைய சுழல் பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement