போட்டியே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள இப்படி பிரச்சனையா? முதல் டெஸ்டில் இருந்து வெளியேறிய வீரர் – ஸ்டோக்ஸ் விரக்தி

Shoaib-Bashir
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. இந்த போட்டி தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுழற்பந்து வீச்சிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் விளையாட நல்ல ஸ்பின்னர்கள் தேவை என்பதால் இங்கிலாந்து அணி முறை ஜாக் லீச், டாம் ஹார்ட்லி, ரேஹன் அகமது மற்றும் சோயிப் பஷீர் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை இந்து தொடருக்காக தேர்வு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியை இளம் சுழற்பந்து வீச்சாளரான சோயிப் பஷீர் தவறவிட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட சோயிப் பஷீர் இங்கிலாந்து நாட்டில் பிறந்து வளர்ந்து தற்போது இங்கிலாந்து தேசிய அணிக்காக விளையாட தகுதியாகியுள்ளார்.

20 வயது மட்டுமே பூர்த்தியடைந்த சோயிப் பஷீர்க்கு இந்தியா விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வர வேண்டுமெனில் அதில் சில விசா நடைமுறைகள் மிகவும் கட்டுக்கோப்புடன் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்த விடயத்தில் தான் தவறு செய்து விட்டது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்தியா வர இங்கிலாந்து அணி திட்டமிட்டு இருந்த வேளையில் அந்த விசா விண்ணப்பம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த விசா விண்ணப்பத்தின் தாமதத்தின் காரணமாகத்தான் சோயிப் பஷீர் தற்போது இந்தியாவிற்கு வர முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் நடைபெறும் ஹைதெராபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவரை பயன்படுத்தலாம் என்று திட்டமிருந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது விரக்தியில் உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் மிகவும் மனம் உடைந்து போய் இருக்கிறேன். அந்த இளம் வீரருக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையா? எனக்கூறி ஸ்டோக்ஸ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement