- Advertisement -
ஐ.பி.எல்

இந்தப் பையனை சரியா பட்டை தீட்டுனா.. சிஎஸ்கே அணியின் வருங்காலமா வருவாரு.. ரவி சாஸ்திரி கணிப்பு

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறத் தயாராகியுள்ளது. வரலாற்றில் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான சென்னை அணி இந்த வருடம் 9 போட்டிகளில் 7 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் தவிக்கும் அந்த அணி எஞ்சியுள்ள போட்டியில் வென்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வருடம் மோசமாக பேட்டிங்கை வெளிப்படுத்தியதே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக டாப் ஆர்டரில் பவர்பிளே ஓவரில் அதிரடியாக ரன்கள் எடுக்கத் தவறியது சிஎஸ்கே அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்து வருகிறது. அதை சரி செய்வதற்காக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது.

- Advertisement -

வளமான வருங்காலம்:

அந்த வாய்ப்பில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் அதிரடியான சிக்ஸர்களையும் பவுண்ரிகளையும் பறக்க விட்ட அவர் 62 ரன்கள் அடித்தார். அதே போல மிடில் ஆர்டரில் தேவால்ட் ப்ரேவிஸ் ஹைதராபாத்துக்கு எதிராக அறிமுகமாகி 42 ரன்கள் வெளுத்து வாங்கியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அந்த 2 வீரர்களை போல் மற்ற பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடாததே தங்களுடைய தோல்விக்கு காரணம் என்று கேப்டன் தோனி ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆயுஷ் மாத்ரே வருங்காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வருவதற்கான திறமைகளைக் கொண்டுள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே அவரை சரியாக பட்டை தீட்டினால் சிஎஸ்கே அணிக்கு சிறந்த வருங்காலத்தை கொடுப்பார் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் சாஸ்திரி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பட்டை தீட்டுங்க:

“மும்பை இந்தியன்ஸ் போன்ற வலுவான அணிக்கு எதிராக மும்பையில் ஆயுஷ் மாத்ரே 3 அற்புதமான ஷாட்டுகளை விளையாடினார். 17 வயதில் நட்சத்திர பவுலர்கள் நிறைந்த மும்பைக்கு எதிராக நம்ப முடியாத ஷாட்டுகளை அடித்த அவர் சிறப்பான துவக்கத்தை பெற்றது கண்களை கவரும் வகையில் அமைந்தது. அவருக்கு நல்ல வருங்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் மட்டுமல்ல.. கே.கே.ஆர் அணியும் பிளே ஆப் போகாது – காரணத்தை கூறிய கும்ப்ளே

“அவரையும் அவர் விளையாடிய ஷாட்டுகளையும் பார்க்கும் போது இந்தப் பையனை சரியான கைகளில் ஒப்படைத்தால் சரியான நபர்கள் சுற்றியிருந்தால் நீண்ட தூரம் செல்வார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து சென்னை அணி தங்களது அடுத்தப் போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைத் தவிர்க்குமா? என்பதே சென்னை ரசிகர்களின் இறுதிக்கட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -