இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில் இவ்விரு அணிகளுமே ஒன்பது போட்டிகளில் விளையாடி வெறும் 2 வெற்றிகளை மட்டும் பெற்று 4 புள்ளிகளுடன் இருப்பதால் இனிவரும் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அந்த இரு அணிகளாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது.
கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது : அணில் கும்ப்ளே
அதேபோன்று கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தற்போது ஒன்பது போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளில் இருக்கும் வேளையில் அந்த அணியும் இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாது என்கிற அதிரடியான கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு என்னை பொறுத்தவரை கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பே கிடையாது. ஏனெனில் இன்னும் அந்த அணி இந்த தொடருக்கான சிறந்த பிளேயிங்க லெவனை கண்டுபிடிக்கவில்லை. ஏனெனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி வரை அவர்கள் பிளேயிங் லெவனில் அடிக்கடி மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
அதுமட்டும் இன்றி இனிவரும் ஐந்து போட்டிகளிலும் வரிசையாக அந்த அணி வெற்றிபெற வேண்டும் என்கிற நிலையில் அவர்கள் அந்த ஐந்து போட்டியிலும் வெல்வது கடினம் என்று எனக்கு தோன்றுகிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு மாற்றங்களை செய்த அவர்கள் சக்காரியா மற்றும் ராவ்மன் பவல் ஆகியோரை முதல் முறையாக இந்த சீசனில் விளையாட வைத்துள்ளனர்.
இப்படி தேவையற்ற மாற்றங்களால் அந்த அணி இன்னும் உறுதியான பிளேயிங் லெவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தெளிவாகியுள்ளது. என்னை பொருத்தவரை கொல்கத்தா அணி நிலையான வீரர்களை தொடர்ந்து ஆட வைப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் ராவ்மன் பவல் இனி தொடர்ந்து அந்த அணிக்காக விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : அவர் ஆடும்போது கெவின் பீட்டர்சனை பார்ப்பது போன்று இருக்கு.. பஞ்சாப் வீரரை பாராட்டிய – சுரேஷ் ரெய்னா
கடந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா 9 முதல் 10 வீரர்களை தொடர்ச்சியாக தக்க வைத்து அவர்களை பயன்படுத்தியிருந்தது. ஆனால் இம்முறை பிளேயிங் லெவனில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாகவே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாது என்று தோன்றுவதாக அணில் கும்ப்ளே கூறியது குறிப்பிடத்தக்கது.



