கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 69 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அவர் விளையாடும்போது பீட்டர்சன் விளையாடுவது போன்று இருக்கு : சுரேஷ் ரெய்னா பாராட்டு
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய கொல்கத்தா அணி 1 ஓவரின் முடிவில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வேளையில் மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. பின்னர் நீண்ட நேரமாகியும் மழை நிற்காததால் இந்த போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளியை வழங்குவதாக அம்பயர்கள் முடிவு செய்தனர். இதன் காரணமாக போட்டி அத்துடன் கைவிடப்பட்டது. இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியின் துவக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 83 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது இந்த அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ள வேளையில் அவர் விளையாடுகையில் “கெவின் பீட்டர்சன்” போன்று இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
பிரப்சிம்ரன் சிங் ஒரு “குட்டி கெவின் பீட்டர்சன்” அவர் விளையாடும் போது பீட்டர்சன் விளையாடுவதை பார்ப்பது போன்று இருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர் கொள்ளும் அவர் மிடில் ஓவர்களின் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றுகிறார்.
இதையும் படிங்க : ஜடேஜா எப்போடா வீட்டுக்கு போலாம்னு ஆடுறாரு.. அவர் எந்த இடத்தில் விளையாடனும்? – சேவாக் கருத்து
பஞ்சாப் அணி இம்முறை அவர்களது துவக்க வீரர்களாலே இவ்வளவு தூரம் வந்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடி வருகிறார்கள். அதனாலே அவர்கள் இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என சுரேஷ் ரெய்னா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



