IND vs AUS : இந்தியாவை சம்மந்தமில்லாம பேச நீங்க யாரு? மைக்கேல் வாகனுக்கு ரவி சாஸ்திரி சவுக்கடி பதில் – நடந்தது என்ன

Ravi Shastri Micheal Vaughan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நாக்பூரில் விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

Rohit Sharma

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் மீண்டும் தடவலாக செயல்பட்ட ராகுல் 20 ரன்களில் அவுட்டானார். அவருக்குப் பின் அஷ்வின் 23, புஜாரா 7, விராட் கோலி 12, சூரியகுமார் யாதவ் 8, கேஎஸ் பரத் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் ஆரம்பம் முதலே நங்கூரமாக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 15 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 120 ரன்கள் குவித்து அவுட்டானார். மேலும் 8வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா 66* ரன்களும் அக்சர் படேல் 52* ரன்களும் எடுத்ததால் 2வது நாள் முடிவில் 321/7 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான கட்டத்தை எட்டியுள்ளது.

சாஸ்திரி பதிலடி:
முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகிய உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்கள் உட்பட 5 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து மிகச் சிறந்த கம்பேக் கொடுத்து 66* ரன்கள் எடுத்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் முதல் நாளன்று முகமது சிராஜ் கொடுத்த ஏதோ ஒரு பொருளை தனது கைகளால் தொட்டு பந்து வீசும் விரல்களில் தடவிய அவர் பந்தை இறுக்கமாக பிடித்து வீசுவதற்காக வேண்டுமென்றே ஏதோ சீட்டிங் செய்ததாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மற்றும் ஏராளமான ஆஸ்திரேலிய ரசிகர்கள் புதிய புயலை கிளப்பினர்.

Micheal Vaughan Jadeja Tim Paine

ஆனால் தொடர்ந்து பந்தை இறுக்கமாக பிடித்ததால் கை விரல்களில் ஏற்பட்ட வலியை குறைப்பதற்காக வலி நிவாரணியை தான் ரவீந்திர ஜடேஜா பயன்படுத்தியதாக போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் அவர்களிடம் இந்திய அணி நிர்வாகம் நேரடியாக விளக்கமளித்தது. அதை நடுவரும் ஏற்றுக் கொண்டதால் உப்பு காகிதத்தை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்துவதற்கு நாங்கள் ஒன்றும் உங்களைப் போன்றவர்கள் அல்ல என ஆஸ்திரேலியர்களுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

- Advertisement -

இந்நிலையில் அந்த தருணத்தில் உண்மையாகவே ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தியிருந்தால் அதை களத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியினரும் போட்டி நடுவரும் கேள்வி எழுப்பியிருப்பார்கள் என்று தெரிவிக்கும் ரவி சாஸ்திரி சம்பந்தமின்றி விமர்சிப்பதற்கு நீங்கள் யார் என மைக்கல் வாகன் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலை வர்ணனையில் இந்தியாவை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது பின்வருமாறு.

Shastri

“இதைப் பற்றி நான் பெரிய அளவில் கேள்விப்படவில்லை. ஆனால் இதை விமர்சித்தவர்களிடம் நான் 2 கேள்விகளை கேட்கிறேன். அதாவது அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியினருக்கு ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டால் பதில் இல்லை என்று வந்தது. அத்துடன் போட்டி நடுவர் அதைப் பற்றி விசாரிக்க வந்தாரா? இல்லை. மாறாக அவரிடம் இந்திய அணியினர் அதைப் பற்றிய முழு விளக்கத்தை அளித்ததால் பிரச்சனைகள் முடிந்து விட்டது”

இதையும் படிங்க: IND vs AUS : ஆல் ரவுண்டராக கபில் தேவின் தனித்துவமான சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா – படைத்த புதிய சாதனை இதோ

“அந்த நிலைமையில் அதை மற்றவர்கள் ஏன் விவாதிக்க வேண்டும்? மேலும் உண்மையை சொல்ல வேண்டுமெனில் அது வலியை குறைக்கும் நிவாரணி மட்டும் தான். ஒருவேளை அதற்கு நடுவர் ஆட்சேபனை தெரிவித்தால் அதற்காக ஜடேஜா மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை அவரிடம் உள்ளது. சொல்லப்போனால் இந்த மைதானத்தில் பந்தை தேய்த்து வெற்றி பெறும் அளவுக்கு எந்த குறுக்கு வழியும் தேவையில்லை. ஏனெனில் பந்து ஏற்கனவே சுழன்று வருகிறது” என்று கூறினார்.

Advertisement