IND vs AUS : ஆல் ரவுண்டராக கபில் தேவின் தனித்துவமான சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா – படைத்த புதிய சாதனை இதோ

Ravindra Jadeja Kapil Dev
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதியன்று நாக்பூரில் துவங்கியது. சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த ஆஸ்திரேலியா அதற்கேற்றார் போல் செயல்படாமல் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வெறும் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றிய நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெடுகளும் எடுத்தனர்.

Jadeja

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட ராகுல் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த அஸ்வின் 23 ரன்கள் குவித்து தனது வேலையை கச்சிதமாக செய்து ஆட்டமிழந்த நிலையில் புஜாரா 7, விராட் கோலி 12, சூர்யகுமாரி யாதவ் 8, கேஎஸ் பரத் 8 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 15 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 120 ரன்கள் குவித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தி அவுட்டானார்.

ஜடேஜாவின் அசத்தல் சாதனை:
அதனால் விரைவில் ஆல் அவுட்டாக்கி விடலாம் என்று எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவுக்கு 8வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தொல்லை கொடுத்த ரவீந்திர ஜடேஜா 66* ரன்களும் அக்சர் பட்டேல் 52* ரன்களும் எடுத்து இந்தியாவை வலுப்படுத்தியுள்ளார்கள். அதனால் 2வது நாள் முடிவில் 321/7 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 144 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தி வருகிறது. முன்னதாக 2019 உலக கோப்பைக்கு பின் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார்.

IND vs AUS

இருப்பினும் 2022 ஆசிய கோப்பையில் காயத்தால் வெளியேறிய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை. அது அந்த 2 தொடர்களிலும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்த நிலையில் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜடேஜா முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே குஜராத் தேர்தலில் தனது மனைவிக்காக பிரச்சாரம் செய்தார். அதன்பின் என்சிஏவுக்கு சென்று பயிற்சிகளை எடுத்தாலும் திருப்தியடையாத பிசிசிஐ இந்தியாவுக்கு விளையாட வேண்டுமெனில் ரஞ்சிக்கோப்பையில் விளையாடி பார்ம் மற்றும் தரத்தை நிரூபிக்குமாறு நிபந்தனை விதித்தது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற தமிழகத்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்து தனது தரத்தை நிரூபித்த ஜடேஜா இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். அதில் முதல் இன்னிங்ஸில் 2/2 என ஆஸ்திரேலியா சரிந்த போது 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த ஐசிசி தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் டாப் பேட்ஸ்மேன்களான மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையும் தனது மாயாஜால சுழலால் சாய்த்து மொத்தம் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

Jadeja

அதே போல் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கிலும் 66* ரன்கள் குவித்து தன்னை நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 50+ ரன்கள் மற்றும் 5+ விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியுடன் சேர்த்து ரவீந்திர ஜடேஜா 5 முறை 50+ ரன்கள் மற்றும் 5+ விக்கெட்டுகளை எடுத்துள்ள நிலையில் கபில் தேவ் 4 முறை எடுத்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க: அவரோட விக்கெட்டை வீழ்த்துவது என் கனவு. அதுவும் முதல் போட்டியிலேயே நடந்ததில் மகிழ்ச்சி – ஆஸி பவுலர் ஹேப்பி

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக முறை 50+ ரன்கள் மற்றும் 5+ விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற அஸ்வின் சாதனையும் அவர் சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா/ரவிச்சந்திரன் அஸ்வின் : தலா 6*
2. கபில் தேவ் : 5

Advertisement