IND vs AUS : நாக்பூர் பிட்ச்ல எப்படி பேட்டிங் பண்ணனும்னு இவரு பாடமே எடுத்திருக்காரு – இர்பான் பதான் புகழாரம்

pathan 1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது போட்டி பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக நாக்பூர் ஆடுகளம் தயாரான விதம் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதோடு ஐசிசி இதில் தலையிட வேண்டும் என்ற அளவிற்கு அவர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர்.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது 177 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை விட 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 212 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் இந்த ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் :

Rohit Sharma

நாக்பூர் மைதானத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், சுழற்பந்து வீச்சாளர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து ரோஹித் சர்மா மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு பாடமே எடுத்துள்ளார். அவர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் என்று பேசப்பட்ட இந்த நாக்பூர் மைதானத்தில் அவர் இதனை செய்து காட்டி அசத்தியுள்ளார் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு அணியின் கேப்டனாக இருக்கும் போது பேட்டிங் மட்டும் இல்லாமல் அணியை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பது குறித்தும் அவர் நன்றாக சிந்திக்கிறார்.

இதையும் படிங்க : அவரோட விக்கெட்டை வீழ்த்துவது என் கனவு. அதுவும் முதல் போட்டியிலேயே நடந்ததில் மகிழ்ச்சி – ஆஸி பவுலர் ஹேப்பி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்ல மிகச் சிறப்பான வாய்ப்பு உள்ளது. அதனை ரோகித் சர்மா உருவாக்கி தருவார் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement