அவரோட விக்கெட்டை வீழ்த்துவது என் கனவு. அதுவும் முதல் போட்டியிலேயே நடந்ததில் மகிழ்ச்சி – ஆஸி பவுலர் ஹேப்பி

Todd-Murphy
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்கியது. அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

IND vs AUS

- Advertisement -

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணியை விட 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த 22 வயது சுழற்பந்து வீச்சாளரான டாட் முர்பி அறிமுகப் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய அவர் கூறுகையில் :

Todd Murphy 1

விராட் கோலி அவுட்டான பந்து என்னுடைய சிறந்த பந்து கிடையாது. ஆனாலும் அவரைப் போன்ற ஒரு பெரிய வீரரின் விக்கெட்டை கைப்பற்றியது என்னுடைய கனவு நனவான தருணம். அவரை பல ஆண்டு காலமாக நான் பார்த்து வருகிறேன். அவருடைய விக்கெட்டை வீழ்த்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

- Advertisement -

அதே போல ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியதில் கூடுதல் சந்தோஷம் எல்லாமே மிக வேகமாக நடந்திருக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : நான் எப்பொழுதுமே எனது பந்துவீச்சுக்காக நிறைய பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். அதே சமயத்தில் என்னால் விக்கெட் எடுக்க முடியும் என்றும் நம்புகிறேன்.

இதையும் படிங்க : வீடியோ : விராட் கோலியை காலி செய்த இளம் ஆஸி வீரர் – வார்னே, லயன் போன்ற நட்சத்திரங்கள் படைக்காத வரலாற்று சாதனை

என்னிடம் பலரும் சொன்னது வழக்கமாக எவ்வாறு பந்து வீசுகிறேனோ அதையே சர்வதேச கிரிக்கெட்டிலும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்த வகையில் புதியதாக எதையும் முயற்சி செய்யாமல் என்னுடைய திறனுக்கு ஏற்றார் போல் பந்து வீசினேன் என டாட் முர்பி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement