இதெல்லாம் கம்மி.. சச்சினின் 19 வருட சரித்திரத்தை ரோஹித் 8 வருஷத்துல உடைச்சுட்டாரு.. சாஸ்திரி பாராட்டு

Ravi Shastri
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தங்களின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடியான சதத்தால் எளிதாக தோற்கடித்து புள்ளி பட்டியலில் பாகிஸ்தானையும் முந்தி 2வது இடத்தைப் பிடித்தது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு உலகக்கோப்பை வேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற கப்பில் தேவ் ஆல் டைம் சாதனையை உடைத்தார். அத்துடன் 5 சிக்ஸர்கள் அடித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார்.

- Advertisement -

சாஸ்திரி பாராட்டு:
இறுதியாக 131 ரன்கள் விளாசிய அவர் மொத்தம் 7 சதங்களுடன் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து மாபெரும் உலக சாதனை படைத்தார். குறிப்பாக கடந்த 1992 – 2011 வரையிலான 19 வருட காலகட்டங்களில் நடந்த 6 உலகக் கோப்பைகளில் சச்சின் 6 சதங்கள் அடித்த நிலையில் ரோஹித் சர்மா 2015, 2019, 2023 ஆகிய 3 உலகக்கோப்பைகளில் 8 வருடத்திலேயே 7 சதங்கள் அடித்து இந்த சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் சச்சின் 19 வருடங்களில் 6 உலகக்கோப்பையில் அடித்ததை ரோகித் சர்மா வெறும் மூன்றே உலகக்கோப்பைகளில் தகர்த்து விட்டதாக ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். மேலும் இத்தோடு நிற்காமல் இன்னும் இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா சதங்களை அடிப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உலக கோப்பையில் வரும் 8 வருடங்களிலேயே 7 சதங்கள் அடிப்பது அபாரமான சாதனையாகும்”

- Advertisement -

“சச்சினுக்கு கூட அதை அடிப்பதற்கு 6 உலக கோப்பைகள் தேவைப்பட்டது. ஆனால் இவர் 3 உலகக் கோப்பைகளில் 8 வருடங்களில் 7 சதங்கள் அடித்துள்ளார். அவர் இன்னும் முடிக்கவில்லை நிறைய சதங்கள் வரும். ஏனெனில் இது போன்ற பெரிய தொடரில் துவக்க வீரரான நீங்கள் நல்ல துவக்கத்தை பெற்றால் இன்னும் 2 – 3 சதங்கள் எளிதாக அடிக்க முடியும்”

இதையும் படிங்க: தாக்கூரை வெச்சுகிட்டு பாகிஸ்தானை ஜெயிக்க முடியாது.. அவர கொண்டு வாங்க.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

“பொதுவாக ரோஹித்தை பற்றி நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தை மற்ற வீரர்களுக்கு பொருந்தாது. குறிப்பாக அவர் சிறப்பாக விளையாடும் போது செய்யும் அனைத்திலும் அவசரப்பட மாட்டார். மேலும் அவரிடம் நல்ல டைமிங் மற்றும் பவர் இருக்கிறது. இந்த இரண்டும் மிகவும் ஆபத்தான கலவை. இவை ஒன்று சேர்ந்தால் உலகில் எவ்வளவு பெரிய மைதானமும் சிறியது போல் தெரியும்” என்று கூறினார்.

Advertisement