இந்திய அணியில் இருந்து விலகியதும் ஐ.பி.எல் அணிக்கு கோச்சாக மாறவுள்ள ரவி சாஸ்திரி – எந்த அணிக்கு தெரியுமா ?

shastri
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 15-வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள வேளையில் புதிதாக இரண்டு அணிகள் அந்த தொடரில் இணையும் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ அறிவித்தபடி புதிய 2 அணிகளுக்கான ஏலமும் துபாயில் வெற்றிகரமாக முடிவடைந்தது. அந்த ஏலத்தில் பலத்த போட்டிக்கு பிறகு 2 புதிய அணிகள் வாங்கப்பட்டன.

csk 1

- Advertisement -

அதன்படி லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அணிகளோடு பழைய 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 10 அணிகள் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்தது. மேலும் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்றும் அதைத் தவிர மற்ற வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக விரைவில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறுவது மட்டுமின்றி அடுத்த தொடருக்கான அட்டவணையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி இந்த தொடர் முடிந்து அவரது பதவியிலிருந்து விலக உள்ளார்.

shastri 1

மேலும் அவர் பதவி விலகியதை தொடர்ந்து அடுத்ததாக அவர் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி சி.வி.சி கேப்பிட்டல்ஸ் குழுமம் வாங்கியுள்ள அகமதாபாத் அணிக்கு அவர் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்த இந்த ஒரு வாய்ப்பு இருக்கிறது – நற்செய்தி சொன்ன அகார்கர்

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அவரோடு சேர்ந்து பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் இந்திய அணியிலிருந்து விலக உள்ளதால் அவர்கள் மூவரும் அப்படியே அகமதாபாத் அணிக்கு பயிற்சியாளராக மாறுவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement