ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்த இந்த ஒரு வாய்ப்பு இருக்கிறது – நற்செய்தி சொன்ன அகார்கர்

Agarkar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த தொடரின் சூப்பர் 12-சுற்றில் இந்திய அணி தங்களது முதல் 2 போட்டிகளிலும் படு மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வென்ற இந்திய அணியானது தற்போது நான்கு புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்த போட்டி நமீபியா அணிக்கு எதிராக இருப்பதால் நிச்சயம் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடும்.

ashwin

- Advertisement -

ஆனாலும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் நாளை நடைபெற உள்ள முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியே ஆக வேண்டும். அப்படி நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ரன் ரேட் அடிப்படையில் ஒரு வாய்ப்பு உள்ளது.

மற்றபடி நியூசிலாந்து ஜெயித்துவிட்டால் இந்திய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறுவது தான் ஒரே வழி. இந்நிலையில் நாளைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர்களிடம் சிறப்பான பந்து வீச்சாளர்களும், அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.

rashid

நாளைய போட்டி பகல் ஆட்டமாக நடைபெறுவதால் சுழற்பந்து வீச்சு நல்ல அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபக்கம் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க வைத்துவிட்டால் மிடில் ஆர்டரில் அந்த அணியின் பேட்டிங் வலுவானதாக இல்லை எனவே நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் நியூசிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பிராவோவுடன் சேர்ந்து ஓய்வை அறிவித்தாரா யுனிவர்ஸ் பாஸ் கிரிஸ் கெயில் ? – ரசிகர்கள் குழப்பம்

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற அருமையான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் விளக்கமாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருந்தாலும் நாளைய போட்டியில் நிச்சயம் நியூசிலாந்து தோற்றால் மட்டுமே இவையெல்லாம் நிகழும் என்பதால் அனைவரும் நாளைய போட்டியில் முடிவுக்காக காத்திருக்க வேண்டியது அவசியம்.

Advertisement