இந்த 2 பிரச்சனையை சரி செய்யலனா வேர்லடு கப் கஷ்டம் தான் – ரவி சாஸ்திரி எச்சரிக்கை

Shastri
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இம்மாதம் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதினால் இந்த கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது அனைவரும் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் இந்த டி20 உலககோப்பை தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

IND vs SA Rishabh Pant Quiton De Kock Rohit Sharma

- Advertisement -

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தயாராகி ஆஸ்திரேலியா பயணித்து வரும் வேளையில் இந்திய அணியும் இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தவிர்க்க வேண்டிய சில பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் : இந்திய அணியில் உள்ள இரண்டு முக்கிய குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று தனது அறிவுரையை வழங்கி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் என்பது மிகவும் சவால்கள் நிறைந்த ஒன்று. இந்த தொடரில் நீங்கள் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்.

IND

ஏனெனில் ஒரு போட்டியில் தோற்றால் கூட உங்களுக்கு பிரஷர் ஏற்படும். அதன் பிறகு உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம், மேலும் நெருக்கடியும் உங்களை தொடரும். ஆனால் அதனை தவிர்க்க தொடரின் ஆரம்பத்திலிருந்து வெற்றிகள் பெற்றால் எளிதாக நம்பிக்கையுடன் விளையாட முடியும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை எந்தவித குறையும் இல்லை.

- Advertisement -

தொடர்ச்சியாக வீரர்கள் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருவதால் மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. ஆனால் நமது பிரச்சினையே டெத் பவுலிங் தான். பும்ரா இல்லாமல் இந்திய அணி சுமாராக செயல்பட்டு வருகிறது. அதனால் பும்ராவிற்கு பதிலாக வருபவர் பொறுப்பை கையில் எடுத்து திட்டங்களை சரியாக வகுத்து அபாரமாக பந்து வீச வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : என்னுடைய இலக்கே அந்த கோப்பையை ஜெயிக்குறது தான். அதுவரைக்கும் விடமாட்டேன் – ஷிகார் தவான் பளீச்

அதே போன்று பீல்டிங்கிலும் தற்போது இந்திய அணி மோசமாக செயல்பட்டு வருகிறது. சுலபமான கேட்ச்சை கூட பிடிக்க முடியாமல் எளிதில் கைவிடுகின்றனர். இந்த இரண்டு பிரச்சனையும் சரி செய்தால் நிச்சயம் இந்திய அணிக்கு இன்னும் பலம் அதிகரிக்கும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement