என்னுடைய இலக்கே அந்த கோப்பையை ஜெயிக்குறது தான். அதுவரைக்கும் விடமாட்டேன் – ஷிகார் தவான் பளீச்

Dhawan-1
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட திட்டமிட்டு இருந்தது. அதன்படி தற்போது இந்தியாவில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் தென்னாப்பிரிக்கா அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.

Rohit Sharma

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றுள்ளது.

இதன் காரணமாக ஷிகார் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தென்னாப்ரிக்க தொடரில் விளையாடும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்தது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று லக்னோ மைதானத்தில் இன்னும் சில மணி நேரங்களில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் ஷிகார் தவான் பல்வேறு நெகிழ்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

India Dhawan

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள ஸ்டான்ட் பை வீரர்கள் இந்த தொடரில் அதிகமாக விளையாடப் போகிறார்கள். எனவே அவர்களது திறனை இந்த தொடர் மூலமாக வெளிக்காட்டுவார்கள். அதோடு இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டால் அது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என்பதனால் அவர்கள் இந்த தொடரில் அற்புதமாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அதோடு எனக்கும் தனிப்பட்ட முறையில் இந்த தொடர் ஒரு முக்கியமான தொடர். ஏனெனில் அடுத்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்த கோப்பையை வெல்வது தான் என்னுடைய இலக்கு அதுவரை நான் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு நல்ல உடல் தகுதியுடனும் நல்ல மனநிலையிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமான தொடர் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐசிசி டி20 உ.கோப்பையில் அசத்தும் திறமை பெற்றுள்ள 5 அண்டர் 23 இளம் வீரர்களின் பட்டியல்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நாங்கள் இந்த இளம்வீரர்களை கொண்ட அணியுடன் விளையாடுவது புதிது கிடையாது. ஏற்கனவே இலங்கை, மேற்கு இந்தியத்தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக இளம் வீரர்களை வைத்து மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறோம் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement