IND vs ENG : அதனால் தான் அப்போவும் இப்போவும் அஷ்வினுக்கு சான்ஸ் கிடைக்கல – காரணத்தை சொன்ன முன்னாள் கோச்

Ashwin
- Advertisement -

ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் இங்கிலாந்து மண்ணில் துவங்கிய இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் போராடி 412 ரன்கள் குவித்து அசத்தியது.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவை 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 222 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீட்டெடுத்தனர். அதில் 19 பவுண்டரி 4 சிக்சர்கள் சதமடித்த 146 (111) ரன்கள் விளாசிய ரிஷப் பண்ட் 131.53 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரசிகர்களை மகிழ்வித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் நிதானமாகவும் மெதுவாகவும் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 13 பவுண்டரியுடன் சதமடித்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் யாருமே எதிர்பாராத வகையில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை தெறிக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்தார்.

அஷ்வினுக்கு வாய்ப்பில்லை:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பந்து வீச்சில் அசத்திய ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். அதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 84/5 என்ற நிலைமையில் இங்கிலாந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சீனியர் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் மற்றும் அஷ்வின் ஆகியோர் மட்டுமே தற்போதைய தேதியில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார்கள்.

- Advertisement -

அதில் லயனுக்கு ஆஸ்திரேலியா விளையாடும் அத்தனை போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் குறிப்பாக ஆசியக் கண்டத்திற்கு வெளியே நடைபெறும் போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற கோணத்தில் அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சமீப காலங்களில் தனது அனுபவத்தால் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ள அஸ்வின் வெளிநாடுகளிலும் மிகச் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளார்.

Ashwin

சான்ஸ் இல்லை:
கடந்த 2020இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அப்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தை சொற்ப ரன்களில் காலி செய்த அவர் 2021இல் இதே இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறிய போது 2 இன்னிங்சிலும் நியூசிலாந்தின் முதல் விக்கெட்டை எடுத்து இந்தியாவின் வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

மேலும் 5 சதங்களுடன் உலகின் நம்பர் 2 ஆல் ரவுண்டராக இருக்கும் அவர் பேட்டிங்கிலும் ரன்களை குவிக்க கூடியவர் என்பதால் அவருக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டதை கொஞ்சம் கூட காதில் வாங்காத முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த தொடரின் முதல் 4 போட்டிகளிலும் அவரை பெஞ்சில் அமர வைத்தது. அந்த நிலைமையில் இம்முறை ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய புதிய தலைமை கூட்டணியும் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை.

shastri

சூழ்நிலையே காரணம்:
இந்நிலையில் இப்போட்டியில் மழை குறுக்கிட்டதை போலவே கடந்த வருடம் முதல் 4 போட்டிகளின் போதும் ஈரப்பதமான கால சூழ்நிலை நிலவியதால் அதில் சுழல் பந்துவீச்சு எடுபடாது என்ற காரணத்தாலேயே அஸ்வினுக்கு வாய்ப்பளிக்காமல் ஷார்துல் தாகூருக்கு வாய்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கும் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இப்போது வாய்ப்பு கிடைக்காததற்கும் அதுவே காரணமென்று தெரிவித்துள்ளார். தற்போதைய 5-வது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் இது பற்றி வெளிப்படையாகப் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த வருடத்தில் ஒவ்வொரு போட்டிகளின் காலையில் நாங்கள் (விராட் கோலியுடன்) பிட்ச் பற்றி சோதிக்க செல்லும்போது அவர் (அஷ்வின்) முதல் 12 வீரர்களில் ஒருவராக இருப்பார். இருப்பினும் பிட்ச்சை பார்த்தபின் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாமா வேண்டாமா என்று நாங்கள் சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதைவிட டாஸ் வீசுவதற்கு 20 நிமிடங்கள் முன்பாக திடீரென்று மேகங்கள் வந்து கால சூழ்நிலைகளை மாற்றியது. ஓவல் டெஸ்டில் (4வது போட்டி) அதுதான் நடைபெற்றது.

இதையும் படிங்க : IND vs ENG : வாயை வெச்சிக்கிட்டு சும்மா இல்லாத விராட் கோலி, வெறிகொண்டு இந்தியாவை அடித்த இங்கிலாந்து வீரர் – நடந்தது இதோ

அதனால் நாங்கள் ஷார்துல் தாகூருக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவரும் 2 அரை சதங்கள் மற்றும் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வேலையை சிறப்பாக செய்தார்” என்று கூறினார்.

Advertisement