IND vs ENG : வாயை வெச்சிக்கிட்டு சும்மா இல்லாத விராட் கோலி, வெறிகொண்டு இந்தியாவை அடித்த இங்கிலாந்து வீரர் – நடந்தது இதோ

Virat Kohli Jonny Bairstow
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக தொடக்கத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் துவங்கிய இந்த தொடரின் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 412 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 17, புஜாரா 13, விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 98/5 என இந்தியா மோசமான தொடக்கத்தை பெற்றது.

அப்போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பிரம்மாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை தூக்கி நிறுத்தினார்கள். அதில் ஒருபுறம் ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட் வெறும் 89 பந்துகளில் சதமடித்து 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற ஸ்டிரைக் ரேட்டில் டி20 இன்னிங்ஸ் போல ரசிகர்களை மகிழ்வித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அசத்தும் இந்தியா:
அவருடன் 2-வது நாள் வரை தொடர்ந்து நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை அடித்து 13 பவுண்டரியுடன் 104 ரன்கள் விளாசி அவுட்டானார். கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84-வது ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக யாரும் எதிர்பாராத உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சில் பும்ரா மிரட்டினார். அதனால் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 84/5 என்ற என்ற நிலைமையில் இங்கிலாந்து மோசமான தொடக்கத்தை பெற்றது.

அதை தொடர்ந்து இன்று துவங்கிய 3-வது நாளில் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை அவுட் செய்ய இந்திய பவுலர்கள் அதிரடி தாக்குதலை தொடங்கினர். அப்போது கணிசமான ஓவர்கள் வீசியதற்குப் பின் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஒருசில வார்த்தைகளை பிரயோகித்து மோதிக் கொண்டனர். அதில் பேர்ஸ்டோ ஏதோ கூறியதால் கடுப்பான விராட் கோலி தனக்கே உரித்தான வழக்கமான பாணியில் அவரின் அருகே சென்று தக்க வார்த்தைகளால் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

வெறிகொண்ட அடி:
அதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அம்பயர் வந்து சமாதானப்படுத்தியதால் அவர்கள் தங்களது இடத்திற்குச் சென்றனர். அதில் முதல் ஸ்லீப் பகுதியில் நின்று கொண்டிருந்த விராட் கோலி வாயை மூடிக்கொண்டு பேட்டிங் செய்யுமாறு பேர்ஸ்ட்டோவுக்கு சைகையால் எச்சரிக்கை கொடுத்தார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீங்கள் அமைதியாக வாயை மூடிக் கொண்டு இருங்கள் என்பதுபோல் பேர்ஸ்டோ தனது கையால் சைகை செய்து பதிலடி கொடுத்தார். அதனால் போட்டியில் அனல் பறக்க துவங்கிய நிலையில் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அடுத்தடுத்த டி20 இன்னிங்ஸ் விளையாடி மிரட்டல் பார்மில் இருக்கும் ஜானி பேர்ஸ்டோ அதுவரை 60 பந்துகளை சந்தித்து வெறும் 12* ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

ஆனால் விராட் கோலி உரசிய தீயால் பற்றிக் கொண்ட அவர் அதன்பின் அதிரடியாக பேட்டிங் செய்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு இந்திய பவுலர்களை வெளுத்து வாங்கி அரை சதம் கடந்தார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அவர் உணவு இடைவேளை முடிந்ததும் 119 பந்துகளில் மிரட்டலான சதமடித்து இந்தியாவுக்கு மாபெரும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். குறிப்பாக முதல் 60 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் அடுத்த 59 பந்துகளில் 88* ரன்களை வெளுத்து வாங்கி இங்கிலாந்தை மீட்டெடுத்து வருகிறார்.

ரசிகர்கள் அதிருப்தி:
இதை பார்க்கும்போது உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை தேவையில்லாமல் தட்டி எழுப்பிய கதையாக மாறிவிட்டதாக பெரும்பாலான இந்திய ரசிகர்கள் விராட் கோலியை சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இறுதி வரை 140 பந்துகளில் 14 பவுண்டரி 2 சிக்சருடன் 106 ரன்களை விளாசி பொட்டியில் ஒரு திருப்பு முனை இன்னிங்ஸ் விளையாடி ஆட்டமிழந்தார்.

Advertisement