பயிற்சியாளராக இல்லையென்றாலும் இந்திய அணியுடன் இங்கிலாந்து சென்றுள்ள ரவி சாஸ்திரி – எதற்கு தெரியுமா?

Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஆண்டு நடைபெற இருந்த போட்டி என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் கடந்த ஆண்டு விராட் கோலியின் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

INDvsENG

- Advertisement -

அதற்கடுத்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் இந்திய அணிக்குள் ஏற்பட்ட கொரோனா அச்சம் காரணமாக அந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட அந்த போட்டியானது ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த முறை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதால் புதிய பயிற்சியாளரான டிராவிடின் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில் ரவி சாஸ்திரி இந்த போட்டியில் பயிற்சியாளராக செயல்படவில்லை என்றாலும் ரவி சாஸ்திரி தற்போது இங்கிலாந்தில் இருப்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

shastri

மேலும் அவர் ஏன் இங்கிலாந்து சென்றடைந்துள்ளார் என்பது சுவாரஸ்யமான தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இறுதியில் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரி வெளியேறியதை அடுத்து தொடர்ந்து தனக்கு பிடித்த பணியான வர்ணனையாளர் பணியை செய்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஹிந்தி மொழியில் வர்ணனை செய்த அவர் தற்போது சர்வதேச போட்டிகளிலும் வர்ணனையாளர் பணியில் செயல்பட துவங்கி விட்டார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து சென்றுள்ள ரவி சாஸ்திரி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்தாவது போட்டியை ஆங்கில மொழியில் வர்ணனை செய்து வருகிறார். அவரின் இந்த புதிய பரிமாணத்தை கண்ட ரசிகர்கள் மீண்டும் அவர் வர்ணனை செய்து வருவதை கண்டு அவரை மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs ENG : 5 ஆவது டெஸ்ட் போட்டியில் அஷ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமாம் – விவரம் இதோ

எப்போதுமே வர்ணனையில் தனது ஜாலத்தை காட்டும் ரவி சாஸ்திரி இம்முறையும் புள்ளி விவரங்களோடு கூடிய வர்ணனையை சிறப்பாக செய்து வருகிறார். ரவி சாஸ்திரியை ஒரு இந்திய அணியின் முன்னாள் வீரராக மட்டுமின்றி, பயிற்சியாளராகவும் கண்ட ரசிகர்கள் அதனையும் தாண்டி அவரது வர்ணனைக்கு மிகப்பெரிய பிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement