157 கி.மீ வேகத்தில் போனால் காணாமல் போயிடுவீங்க, விவேகம் வேணும் – உம்ரான் மாலிக்கு ஜாம்பவான் எச்சரிக்கை

Umran Malik Last Over
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறந்து வரும் இந்த தொடரில் லீக் சுற்று உச்சகட்டத்தை தொட்டுள்ளதால் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க பெரும்பாலான அணிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 5 வெற்றிகளையும் தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் தவிக்கிறது.

DC vs SRH Kane Williamson

- Advertisement -

இந்த வருடம் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி அதன்பின் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று டாப் 4 இடத்திற்குள் நுழைந்து. ஆனால் அதன்பின் வரிசையாக கடைசியாக பங்கேற்ற 4 போட்டிகளில் தோற்றதால் தற்போது அந்த அணியின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பேட்டிங்கில் அந்த அணியின் கேன் வில்லியம்சன் உட்பட முக்கிய வீரர்கள் ரன்கள் எடுக்க தவறுவது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.

வள்ளலாக உம்ரான்:
அதேபோல் பந்துவீச்சில் அந்த அணிக்காக விளையாடிய தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயத்தால் சமீபத்திய போட்டிகளில் விலகியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவர்களில் இல்லாத நேரத்தில் வழக்கம்போல அனுபவம் நிறைந்த புவனேஸ்வர் குமார் கட்டுக் கோப்புடன் பந்துவீச அதை வீணடிக்கும் வகையில் கார்த்திக் தியாகி, உம்ரான் மாலிக் போன்றவர்கள் ரன்களை வாரி வழங்குகிறார்கள். குறிப்பாக அந்த அணிக்காக விளையாடும் 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் வீசினாலும் அதற்கு ஈடாக ரன்களையும் வாரி வழங்குகிறார்.

இந்த வருட ஆரம்ப கட்டத்தில் 145 கி.மீ என்ற வேகத்தில் வீசத் தொடங்கிய அவர் அதற்கு ஈடாக ரன்களை கொடுத்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் அதன்பின் ஒருசில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய அவர் குறைந்த ரன்களைக் கொடுத்து நிறைய விக்கெட்டுகளை எடுத்ததால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும் கடைசி 2 போட்டிகளில் மீண்டும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் பந்து வீசுவது பலரையும் அதிருப்தியடைய வைத்துள்ளது.

- Advertisement -

157 வேகம்:
குறிப்பாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகப்பந்து வீசிய அவர் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். ஆனால் அதற்கு ஈடாக 4 ஓவர்களில் 52 ரன்களை கொடுத்த அவர் நேற்று பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் வெறும் 2 ஓவரில் 25 ரன்கள் அள்ளித் தெளித்தார். இப்படி விவேகமில்லாத வேகத்தில் எந்த பயனில்லை என முன்னாள் இந்திய ஜாம்பவான் ரவி சாஸ்திரி அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Shastri

இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “156 கி.மீ வேகத்தில் புத்திசாலிதனம் இருக்கிறது, நாங்கள் அனைவரும் விரும்புகிறோம், உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று அவரிடம் கூறும்போது அவரின் முகத்தில் நல்ல உணவை பார்க்க முடியும். ஆனால் உங்களின் 156 என்ற வேகம் சரியான வகையில் பயன்படுத்தப்படவில்லை எனில் அது பேட்டில் 256 ரன்களாக திரும்பி வரும். அது தான் தற்போது நடைபெற்று வருகிறது. வேகம் என்பது நல்லது என்றாலும் அதை சரியான இடத்தில் வீசுவதற்கு நீங்கள் யோசிக்க வேண்டும்”

- Advertisement -

“அல்லது அந்த வேகத்தை ஒளித்து வைத்து திடீரென பயன்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம் என்பது போன்ற யோசனைகளை உங்களது மனதில் ஓடவேண்டும். நீங்கள் அதை சரியாக பிரயோகம் செய்யவில்லை எனில் அதுவே பெரிதாக மாறிவிடும். அது பேட்டிலிருந்து 250 அல்லது 300 ரன்களாக மாறிவிடும். இந்த வருட ஐபிஎல் தொடரில் முதல் ஒருசில வாரங்களில் பிட்ச்சில் இருந்த வேகம் தற்போது குறைந்து வருவதுடன் பேட்டிங்க்கு சாதகமாக மாறி வருகிறது. எனவே அதற்கேற்றார் போல் சரியாக பந்துவீச வேண்டும்” என்று கூறினார்.

umran

தன்னிடம் இருக்கும் வேகத்தை எப்படி எல்லாம் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம் என்று உம்ரான் மாலிக் யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ள ரவி சாஸ்திரி தொடர்ச்சியாக ஒரே மாதிரியான வேகத்தில் வீசுவது எந்த பயனையும் அளிக்காது என்று கூறினார். மேலும் சரியான லைன், லென்த் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் வெறும் வேகத்தில் மட்டும் கவனம் செலுத்தி 157 கி.மீ வேகத்தில் வீசினால் அது பேட்டில் 300 ரன்களாக மாறி உங்களுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட் பொறுத்தவரை தோனி பர்ஸ்ட்ன்னா. தினேஷ் கார்த்திக் தான் செகன்ட்டாம் – சாதனை விவரம் இதோ

அத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் இப்படி 50 ரன்களை கொடுக்காமல் எப்படி கட்டுக் கோப்புடன் பந்து வீச வேண்டும் என்பதை அவர் விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவரின் வேகத்தை போலவே கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றும் ரவி சாஸ்திரி அக்கறையுடன் எச்சரித்தார்.

Advertisement