டி20 கிரிக்கெட் பொறுத்தவரை தோனி பர்ஸ்ட்ன்னா. தினேஷ் கார்த்திக் தான் செகன்ட்டாம் – சாதனை விவரம் இதோ

Karthik
- Advertisement -

சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி டி20 கிரிக்கெட் ஆரம்பத்த காலத்திலிருந்து மிகச் சிறப்பான விக்கெட் கீப்பராக திகழ்ந்து வருகிறார். உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் வீரர்களில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக பார்க்கப்படும் மகேந்திரசிங் தோனி ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருவதன் மூலம் தற்போது டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் சீசனானது தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Dhoni

- Advertisement -

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் முடிவுசெய்யும் போட்டிகள் இன்னும் சில போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காகப் கடுமையாக போராடி வருகின்றன. அந்த வகையில் இந்த சீசனில் சென்னை அணி தங்களது பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டாலும் தோனியின் கேப்டன் மாற்றத்திற்கு பிறகு தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த கடைசி லீக் போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்தப் போட்டியில் டெல்லி அணியை சேர்ந்த ரோவ்மன் பவல் ஆட்டமிழந்த பிறகு ஷர்துல் தாகூரின் கேட்சினை பிடித்த டோனி டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை நடத்தியுள்ளார்.

Dhoni

அதன்படி உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக களமிறங்கிய தோனி தற்போது வரை 347 போட்டிகளில் விளையாடி 200 கேட்ச்களை பிடித்துள்ளார்.

- Advertisement -

இப்படி டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்திருக்கும் அதேவேளையில் அடுத்ததாக அவரைத்தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் 299 போட்டிகளில் விளையாடி 182 கேட்ச்களை பிடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : வாழ்வா சாவா போட்டியில் அசத்திய கொல்கத்தா – மீண்டும் சொதப்பிய மும்பை பரிதாபம், நடந்தது இதோ

இவர்கள் இருவரையும் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த கம்ரான் அக்மல் 282 போட்டிகளில் விளையாடி 172 கேட்ச்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 168 போட்டிகளில், 129 விக்கெட்டுகளை கைப்பற்றி தோனி சாதனை படைத்துள்ளார். இதில் 39 ஸ்டெம்பிங்குகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement