- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்டீவ் ஸ்மித் செய்ஞ்ச அந்த விஷயத்தை பாலோ பண்ணா விராட் கோலி கலக்குவாரு – ரவி சாஸ்திரி அட்வைஸ்

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் அடுத்ததாக நடைபெறவிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது.

விராட் கோலி இதை செய்ஞ்சா போதும் :

இதன் காரணமாக தற்போது மெல்போர்ன் நகர் சென்றடைந்துள்ள இந்திய வீரர்கள் அனைவரும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இரண்டாவது இன்னிங்சின் போது ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

ஆனால் அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார். அதுமட்டுமின்றி தொடர்ந்து அவர் எளிதாக வீழ்த்தப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது இந்த பார்ம் சரிவு குறித்து பல்வேறு நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி விராட் கோலி குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி முதல் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளாக அவர் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தபோது முதல் பாதியில் நிதானத்துடன் ஒழுக்கமாக விளையாடியதால் இரண்டாவது பாதியில் அவருக்கு விருப்பமான சுதந்திரமான ஷாட்களை விளையாட முடிந்தது. இதன் காரணமாக அவர் சதம் அடித்து பழைய பார்மிற்கு திரும்பினார். அதே போன்று விராட் கோலியும் நான்காவது போட்டியின் போது முதல் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆரம்பத்தில் நிதானத்துடன் ஒழுக்கமாக விளையாடினால் அதன் பிறகு அவரால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும்.

இதையும் படிங்க : அந்த தப்பை மட்டும் பண்ணா தோனி திரும்பவும் ஓவர் தரமாட்டாரு – அஷ்வின் பகிர்ந்த தகவல்

தற்போது அவர் பார்மில் இல்லை என்று நான் கூறவில்லை. ஏனெனில் விராட் கோலி போன்ற வீரர் பார்மில் சற்று பின்தங்கி இருக்கிறாரே தவிர அவர் பார்ம் அவுட் என்பதெல்லாம் கிடையாது. நிச்சயம் விராட் கோலியால் பெரிய இன்னிங்ஸை விளையாட முடியும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -