அந்த தப்பை மட்டும் பண்ணா தோனி திரும்பவும் ஓவர் தரமாட்டாரு – அஷ்வின் பகிர்ந்த தகவல்

Dhoni
- Advertisement -

இந்தியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வரும் வேளையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த பல்வேறு முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

இதை செய்தால் தோனிக்கு பிடிக்காது :

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோனியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த சில சுவாரசிய கருத்துகளையும் பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

அஸ்வின் ஆரம்ப கட்டத்தில் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமாகி பின்னர் இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக மாறியவரை தோனியின் தலைமையின் கீழ் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் கேப்டனாக தோனி எவ்வாறு செயல்படுவார் என்பது குறித்த சில கருத்துக்களை பகிர்ந்துள்ள அஸ்வின் கூறுகையில் :

தோனி குறித்து நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் என் மனதில் சில எளிய விடயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. பெரும்பாலான கேப்டன்கள் செய்ய தவறும் அடிப்படை விஷயங்களை தோனி மிகச்சரியாக செய்வார். பந்துவீச்சாளரிடம் இருந்து எவ்வாறு முழு திறனையும் வெளிக்கொண்டுவரும் முடியும் என்பது குறித்த அனைத்து தகவலும் தோனிக்கு தெரியும்.

- Advertisement -

அதனால் தான் பந்துவீச்சாளருக்கு எப்போது ஓவரை வீச வழங்கினாலும் அவர்களுக்கு ஏற்றவாறு ஃபீல்டு செட் செய்து அதற்கேற்றவாறு பந்து வீசுமாறு கேட்டுக் கொள்வார். அதன் காரணமாகவே ஒரு பந்துவீச்சாளர் சுதந்திரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுக்க முடிகிறது. தோனி நம்மிடம் பந்தை கொடுக்கும்போது அந்த ஓவரில் இரண்டு, மூன்று பவுண்டரிகளை வழங்கினால் கூட பிரச்சனை கிடையாது.

இதையும் படிங்க : மற்ற கேப்டன்களை விட எம்.எஸ் தோனி சக்சஸ்புல் கேப்டனாக இருக்க இதுதான் காரணம் – அஷ்வின் கருத்து

நல்ல பந்துகளை பேட்ஸ்மேன் அடித்தால் ஒரு கேப்டனாக அணியின் பவுலரை அவர் பாராட்டுவார். ஆனால் புதிதாக களத்திற்கு வரும் ஒரு பேட்ஸ்மேன் கட் அல்லது டிரைவ் அடிக்கும் எளிய பந்துகளை நாம் வீசினால் தோனிக்கு நிச்சயம் கோபம் வரும். அதன் பிறகு அவர் தொடர்ந்து பந்துவீச அனுமதிக்க மாட்டார் என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement