இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரா சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அவர் குறித்த செய்திகள் நாள்தோறும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. என்னதான் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
இதனால் தான் தோனி பெஸ்ட் கேப்டன் :
மேலும் தற்போது 43 வயது எட்டியுள்ள அவர் அடுத்த ஆண்டு அன்கேப்டு வீரராக சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் மேலும் ஒரு சீசன் விளையாடிவிட்டு தான் ஓய்வை அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நாள்தோறும் தோனி குறித்து பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வரும் வேளையில் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் தோனியின் கேப்டன்சி எபிலிட்டி குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. எப்பொழுதுமே ஒரு கேப்டனாக அவர் அடிப்படையில் விஷயங்களை சரியாக செய்வார். அதனாலேயே அவர் சிறந்த கேப்டனாக இருக்கிறார். அதேபோன்று தோனி பவுலர்களை முழுவதுமாக நம்பக்கூடிய ஒரு கேப்டன்.
ஏனெனில் எப்போது அவர் ஒரு பந்துவீச்சாளரை அழைத்தாலும் அவரது இஷ்டத்திற்கு பீல்டிங்கை அமைக்க உதவுவார். அதன் பின்னர் பீல்டிங்குக்கு ஏற்றவாறு பந்து வீசவும் அறிவுறுத்துவார். அதனாலேயே பந்துவீச்சாளர்களுக்கும் வேலை எளிதாகிவிடும். அதேபோன்று நமது ஓவரில் இரண்டு மூன்று பவுண்டரிகள் சென்றால் கூட தோனி எதுவும் பேச மாட்டார். நல்ல பந்துகள் பவுண்டரிக்கு சென்றால் நிச்சயம் அவர் பாராட்டவும் தவறுவதில்லை.
இதையும் படிங்க : நான் எதுமே சொல்ல தேவையில்லை.. அவருக்கே எல்லா தெரியும்.. பும்ராவை பாராட்டி தள்ளிய – ரோஹித் சர்மா
பொறுமையாக இருந்து மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு ஏற்றவாறு திட்டத்தை அமைத்துக் கொடுப்பதில் தோனி மிகவும் திறமைசாலி. அதனால் மற்ற கேப்டனை விட அவர் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்தார் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



