ஒருநாள் போட்டிகளை புதுப்பிக்க அதை தாராளமாக செய்யலாம் – பாக் வீரரை ஆதரித்த ரவி சாஸ்திரி

IND vs ENg Rohit Sharma Jos Buttler
- Advertisement -

நூற்றாண்டுகளுக்கு முன்பு எண்ணற்ற நாட்களைக் கொண்ட போட்டிகளாக துவங்கப்பட்ட கிரிக்கெட் நாளடைவில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளாக மாற்றப்பட்டு 20-ஆம் நூற்றாண்டின் பெரும்பாலான வருடங்களில் விளையாடப்பட்டது. ஆனால் 5 நாட்கள் நடந்தாலும் பெரும்பாலும் முடிவுகளை கொடுக்காமல் டிராவில் முடிவடைந்த டெஸ்ட் போட்டிகள் அலுப்பு தட்டும் வகையில் அமைந்ததால் ரசிகர்களை கவர்வதற்காக ஒரு நாளில் முடிவை காணும் ஒருநாள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் அந்த வகையான போட்டிகளை மையப்படுத்தி உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் உலக கோப்பையும் அறிமுகப்படுத்தப் பட்டதால் நாளடைவில் டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் போட்டிகள் ரசிகர்களின் அபிமான கிரிக்கெட்டாக உருவெடுத்தது.

T2 World Cup vs IPL ICC vs BCCI

- Advertisement -

அதை தொடர்ந்து நவீன யுகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப 21-ஆம் நூற்றாண்டில் 8 – 9 மணி நேரங்கள் அமர்ந்து ஒருநாள் கிரிக்கெட் பார்க்க முடியவில்லை என கருதிய ரசிகர்களுக்காக 2005இல் தொடங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் பரபரப்பான தருணங்களை கொண்டு எதிர்பாராத முடிவுகளைத் கொடுத்தது. அதனால் உருவாக்கப்பட்ட ஒருசில வருடங்களிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை பின்னுக்கு தள்ளிய டி20 போட்டிகள் நம்பர் ஒன் கிரிக்கெட்டாக மாறியது.

அதைப்பார்த்து துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் தருணங்களை விருந்தாக படைத்து எதிர்பாராத தில்லர் திருப்பங்களை முடிவுகளாக கொடுப்பதுடன் ஆயிரக்கணக்கான கோடிகளை பண மழையாக கொட்டுவதால் தற்போது ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை விட ஐபிஎல் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் நம்பர் ஒன் தொடராக மாறியுள்ளது.

Ben Stokes

ஒன்டே வீழ்ச்சி:
இருப்பினும் இத்தனை வகையான போட்டிகள் நடைபெறுவதால் ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அந்த அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க்கும் நிலைமை ஏற்படுகிறது. அதனால் தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடும் அவர்கள் ஒரு கட்டத்தில் களைப்படைந்து பணிச்சுமைக்கு உள்ளாகி பார்மை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதனாலேயே விராட் கோலி போன்றவர்கள் இடையிடையே சிறிய தொடர்களில் ஓய்வெடுத்து முக்கிய தொடர்களில் விளையாடுகின்றனர். இருப்பினும் அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து 31 வயதிலேயே மொத்தமாக ஓய்வு பெற்றது அதிர்ச்சியாக அமைந்தது.

- Advertisement -

பணத்திற்காக டி20 கிரிக்கெட் தரத்தை நிரூபிப்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட் என்ற வகையில் ஒருநாள் கிரிக்கெட்டை அவர் புறக்கணித்துள்ளது அதனுடைய வீழ்ச்சியை காட்டுவதாக வல்லுநர்கள் கவலை தெரிவித்தனர். ஏனெனில் 5-வது நாளில் கடைசி மணி நேரத்தில் திடீரென முடிவு மாறி விடலாம் என்ற ஸ்வாரஸ்யத்தை கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கும் ஓவருக்கு ஓவர் அனல்பறக்கும் ஸ்வாரஸ்யத்தை கொண்ட டி20 போட்டிகளுக்கும் மத்தியில் பொறுமையாகவும் இல்லாமல் அதிரடியாகவும் இல்லாமல் நடைபெறும் ஒருநாள் போட்டிகள் சுவாரஸ்யம் இல்லாமல் எதிர்பார்த்த முடிவுகளை கொடுப்பதாக பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

Afridi

40 ஓவர்:
அதனால் ஒன்று புதுமை ஏற்படுத்த வேண்டும் அல்லது ஒருநாள் கிரிக்கெட்டை மொத்தமாக நிறுத்திவிடலாம் என்று வாசிம் அக்ரம், உஸ்மான் கவாஜா போன்ற முன்னாள் இந்நாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் இப்போதும் உலக சாம்பியனை 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட உலக கோப்பையில் தீர்மானிக்கப் படுவதால் அது தொடர்ந்து நடைபெற ஒருநாள் போட்டிகள் அவசியமென்று ஒரு தரப்பு ஆதரவு கொடுக்கின்றது. அந்த நிலைமையில் 50 ஓவர்களை கொண்ட ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்களை குறைத்து 40 ஓவர்களாக நடத்தினால் மீண்டும் பழைய சுவாரசியம் வந்துவிடும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி ஆலோசனை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஆரம்ப காலத்தில் சொல்லப்போனால் இந்தியா முதல் உலகக்கோப்பையை வென்ற 1983 வரை 60 ஓவர்களாக இருந்த ஒருநாள் போட்டிகள் பின்னர் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் 90களில் மிகவும் புகழ்பெற்றது. எனவே அப்ரிடியின் இந்த ஆலோசனையை வரவேற்கத்தக்கது என்று ரசிகர்கள் கருதிய நிலையில் இதை முன்னாள் இந்திய ஜாம்பவான் ரவி சாஸ்திரியும் வரவேற்றுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

1983

“போட்டிகளின் நீளத்தை குறைப்பதில் எந்த தவறும் கிடையாது. சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட் தொடங்கப்பட்ட போது 60 போட்டிகளாக இருந்தது. நாங்கள் 1983இல் உலக கோப்பையை வென்ற போதும் 60 ஓவர்களாக இருந்தது. அதன்பின் 60 ஓவர்கள் அதிகப்படியானதாக அனைவரும் கருதினார்கள். மேலும் 20 முதல் 40 வரையிலான ஓவர்கள் ஜீரணிக்க கடினமாக இருப்பதாகவும் அனைவரும் கருதினர்.

இதையும் படிங்க : இவருக்கு மட்டும் தொடர்ச்சியா வாய்ப்பு கிடைச்சா அடிச்சி நொறுக்குவாரு – இந்திய வீரருக்கு கனேரியா ஆதரவு

அதனால் 60இல் இருந்து 50 ஓவர்களாக குறைத்தார்கள். அந்த முடிவு எடுத்து நிறைய வருடங்கள் கடந்து விட்டன என்பதால் இப்போது ஏன் 50இல் இருந்து 40 ஓவர்களாக குறைக்கக் கூடாது. ஏனெனில் எப்போதும் நாம் புதுமையை முயற்சிக்க வேண்டும். 50 ஓவர்கள் என்பது நீண்ட காலங்களாக விளையாடப் பட்டுவிட்டது” என்று கூறினார்.

Advertisement