- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாங்கல்லாம் இதை செய்யக்கூடாதா.. இங்கிலாந்தின் திட்டம் எனக்கு தெரிஞ்சுடுச்சு.. திலக் பற்றியும் பிஸ்னோய் பேட்டி

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 165-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 45 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

அடுத்ததாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சஞ்சு சாம்சன் 5, அபிஷேக் ஷர்மா 12, கேப்டன் சூரியகுமார் 12, ஜூரேல் 4, ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மாவும் ஒரு கட்டத்திற்கு பின் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அவருக்கு கடைசி நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் 26, அர்ஷ்தீப் 6, ரவி பிஸ்னோய் 9* ரன்கள் எடுத்து கை கொடுத்தார்கள்.

- Advertisement -

பிஸ்னோய் அசத்தல்:

குறிப்பாக ரவி பிஸ்னோய் 2 பவுண்டரிகளுடன் 9* (5) ரன்கள் விளாசியது வெற்றியை உறுதி செய்தது. அதைப் பயன்படுத்தி திலக் வர்மா 72* (55) ரன்கள் குவித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக இங்கிலாந்துக்கு பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் தம்மை அவுட்டாக்க இங்கிலாந்து போட்ட திட்டத்தை தெரிந்து விளையாடியதாக ரவி பிஸ்னோய் கூறியுள்ளார். மேலும் எப்போதும் பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் அதிரடியாக விளையாட வேண்டுமா? என்று தெரிவிக்கும் அவர் தங்களைப் போன்ற பவுலர்களும் பேட்டிங்கில் அசத்த முடியும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

திலக் வர்மாவுக்கு பாராட்டு:

“தேவையற்ற ஷாட்டுகளை அடிக்காமல் ஸ்ட்ரைக்கை வர்மாவுக்கு கொடுப்பதே என்னுடைய வேலையாக இருந்தது. ஏன் பேட்ஸ்மேன்கள் மட்டும் அனைத்து வேடிக்கையான விஷயங்களை பெறுகிறார்கள்? என்று இன்று நான் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் போட்டிருந்தேன். ஸ்லிப் பகுதிக்கு ஃபீல்டர் வந்ததும் இங்கிலாந்து என்னை லெக் ஸ்பின் வைத்து அவுட் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்தது”

இதையும் படிங்க: சென்னையில் இந்தியாவின் சுத்தம் நல்லாருக்கா? ஹரி ப்ரூக்கை நேரலையில் கலாய்த்த ரவி சாஸ்திரி, கவாஸ்கர்

“அதனால் கவர்ஸ் திசைக்கு மேலே அடிக்க முயற்சித்த போது அதிர்ஷ்டமாக எனக்கு பவுண்டரி கிடைத்தது. திலக் விளையாடியது ஒரு சிறந்த டி20 இன்னிங்ஸ். ஏனெனில் எதிரணியில் பெரிய பவுலர்கள் இருக்கும் நிலையில் பிட்ச் கடினமாக இருந்த சூழ்நிலையில் எதிர்ப்புறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. 2 – 3 மாதங்களாகவே அவர் நன்றாக செயல்பட்டு வருகிறார். தென்னாப்பிரிக்காவில் இரட்டை சதங்கள் அடித்த அவர் உள்ளூரிலும் அசத்தி வந்ததால் இப்படி விளையாடுவார் என்பது எங்களுக்கு தெரியும். தற்போது அவர் பெரியதாக அசத்தி வருகிறார்” என்று கூறினார்.

- Advertisement -