சென்னையில் இந்தியாவின் சுத்தம் நல்லாருக்கா? ஹரி ப்ரூக்கை நேரலையில் கலாய்த்த ரவி சாஸ்திரி, கவாஸ்கர்

Ravi Shastri
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2 – 0* என்ற கணக்கில் இந்தத் தொடரில் இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இந்தத் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் கொஞ்சம் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக இந்தியாவில் தற்போது குளிர்காலம் என்பதால் பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரத்தில் புகைமூட்டம் போல் தெரிவது வழக்கமாகும். ஆனால் அந்த புகை மூட்டத்தால் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பந்தை தம்மால் சரியாக பார்க்க முடியவில்லை என்று ஹரி ப்ரூக் தெரிவித்தார்.

- Advertisement -

சுத்தம் போதுமா:

அதனாலேயே பந்தை சரியாக பார்த்து அடிக்க முடியாமல் அவரிடம் தாம் விக்கெட்டை இழந்ததாகவும் ப்ரூக் கூறினார். அந்த வகையில் இந்தியாவில் காற்று சுத்தமாக இல்லை என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். எனவே சென்னையில் நடைபெறும் 2வது போட்டியிலாவது காற்று சுத்தமாக இருக்கும் என்று நம்புவதாக ப்ரூக் வேடிக்கையான காரணத்தை தெரிவித்தார்.

அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இதெல்லாம் ஒரு சாக்கா? என்று சமூக வலைதளங்களில் அவரை கலாய்த்தார்கள். அந்த சூழ்நிலையில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இரவு நேரத்தில் பெரியளவில் பனிமூட்டம் இல்லாததால் காற்றும் காட்சிகளும் தெளிவாகவே இருந்தது. ஆனால் அப்படி இருந்தும் ஹரி ப்ரூக் 13 (8) ரன்களில் மீண்டும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சுழலில் கிளீன் போல்ட்டானார்.

- Advertisement -

கலாய்த்த ஜாம்பவான்கள்:

அப்போது நேரலையில் ரவி சாஸ்திரி அவரை கலாய்த்தது பின்வருமாறு. “உங்களுக்கு புகை தேவையில்லை. மீண்டும் அவரை வருண் சக்கரவர்த்தி அவுட்டாகியுள்ளார். பந்து உள்ளே சென்று ஸ்டம்ப்பை உடைத்துள்ளது” என்று கூறினார். அவருடன் வர்ணனையாளர் அறையில் இருந்த சுனில் காவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: எங்களிடம் இருந்து வெற்றியை தட்டிப்பறிச்சது அவர்தான்.. இந்திய வீரரை பாராட்டிய – ஜாஸ் பட்லர்

“நீங்கள் சொன்னீர்கள், நீங்கள் சொன்னீர்கள். இங்கே வெளிச்சம் தெளிவாக இருக்கிறது. கொல்கத்தாவில் கொஞ்சம் பனிமூட்டம் இருந்தது. ஆனால் இங்கே பனி இல்லை. ஆனாலும் பந்து எங்கே செல்கிறது என்ற ஐடியா இல்லாத ப்ரூக் 13 ரன்களில் அவுட்டாகி செல்கிறார். ஒருவேளை அவரிடம் இங்கே எதுவும் பனி இருக்கிறதா? என்று வருண் சக்கரவர்த்தி கேட்கிறார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement