இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
நாங்கள் தோல்வியை சந்திக்க அவர்தான் காரணம் :
இதன் காரணமாக இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. நேற்று நடைபெற்ற முடிந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணகிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் குவித்தது.
பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.2 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி சார்பாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : உண்மையிலேயே இது ஒரு நல்ல போட்டி இருந்தாலும் இந்திய வீரரான திலக் வர்மா எங்களிடமிருந்து வெற்றியை பறித்து சென்று விட்டார்.
நாங்கள் இந்த போட்டியில் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி இருந்தோம். அதேபோன்று அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தோம். இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக விளையாடிய எங்களை வீழ்த்தி விட்டது. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி. ஏனெனில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியாக விளையாடினோம்.
இதையும் படிங்க : கம்பீர் கொடுத்த மெசேஜ் தான் இதுக்கு காரணம்.. தெ.ஆ மண்ணிலேயே இதை பாத்துட்டோம்.. ஆட்டநாயகன் திலக் பேட்டி
அதை தான் ஒரு அணியாக நாங்கள் விரும்புகிறோம். இந்த போட்டியில் வெற்றிக்கு தேவையான அளவு ஸ்கோரை அடித்ததாகவே நினைக்கிறோம். ஆனாலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களை வீழ்த்தியுள்ளனர் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.



