கம்பீர் கொடுத்த மெசேஜ் தான் இதுக்கு காரணம்.. தெ.ஆ மண்ணிலேயே இதை பாத்துட்டோம்.. ஆட்டநாயகன் திலக் பேட்டி

- Advertisement -

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 165-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 45, பிரைடன் கார்ஸ் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அக்ஸர் பட்டேல் 2, வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 5, அபிஷேக் ஷர்மா 12, கேப்டன் சூரியகுமார் 12, ஜூரேல் 4, ஹர்திக் பாண்டியா 7, அக்சர் படேல் 2, சுந்தர் 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடிய திலக் வர்மா 72* (55) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

நாயகன் திலக்:

அவருடன் ரவி பிஸ்னோய் 9* (5) அர்ஷ்தீப் சிங் 6 ரன்கள் எடுத்ததால் 19.2 ஓவரில் 166-8 ரன்கள் எடுத்த இந்தியா திரில்லர் வெற்றி பெற்றது. அத்துடன் 2 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 72* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய திலக் ஆட்டநாயகன் விருது வென்றார். அது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது. நேற்று கௌதம் கம்பீர் சாருடன் நான் பேசினேன். அப்போது எது நடந்தாலும் நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் வளைவுத்தன்மையுடன் விளையாட வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார்”

- Advertisement -

பிஸ்னோய் உதவி:

“இது போன்ற மைதானங்களில் இடது வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது நல்ல ஆப்ஷன். பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது. அவர்களும் லைன், லென்த் ஆகியவற்றை மாற்ற வேண்டி இருந்தது. ஷார்ட் பந்துகளுக்கு எதிராக நாங்கள் தென்னாப்பிரிக்காவில் ஏற்கனவே விளையாடியுள்ளோம். சொல்லப்போனால் இங்கே வீசப்பட்ட அந்த பந்துகளை விட அங்கே வீசப்பட்டது கடினமாக இருந்தது”

இதையும் படிங்க: 72 ரன்ஸ்.. இங்கிலாந்திடம் வெற்றியை இந்தியாவுக்காக பறித்த திலக்.. யாருமே செய்யாத தனித்துவ உலக சாதனை

“ஆர்ச்சருக்கு எதிராக நாங்கள் தயாராக வந்தோம். ஆனால் அவரும் மார்க் வுட்டும் வேகமாக வீசினார்கள். வலைப்பயிற்சியில் நாங்கள் கடினமாக உழைத்தது இங்கே நல்ல முடிவை கொடுத்தது. இடைவெளியை பார்த்து அடிப்பதற்காக வடிவத்தை பிடித்து விளையாடுங்கள் என்று பிஸ்னோயிடம் சொன்னேன். அதைப் பின்பற்றி அவர் விளையாடியது அற்புதமானது. அது போட்டியை ஃபினிஷிங் செய்ய எனக்கு எளிதாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement