முன்ன மாதிரி இப்போ யாரும் இல்லங்க. நேரடியாக இந்திய அணி வீரர்கள் குறித்து – தமிழக வீரர் அஷ்வின் ஆதங்கம்

Ashwin
- Advertisement -

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடி இந்திய அணியானது 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அனைவராலும் பேசப்பட்டது. அதோடு இந்த இறுதி போட்டியில் ரோஹித் சர்மாவின் அணித்தேர்வு மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த தவறினை சுட்டிக்காட்டி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Ashwin

- Advertisement -

அதோடு நிச்சயம் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான அஸ்வின் அந்த இறுதிப் போட்டியில் விளையாடிருக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடாத அஸ்வின் அங்கிருந்து நேராக புறப்பட்டு தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் அணியை தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

அவரது தலைமையில் நடப்பு டி.என்.பி.எல் தொடரில் திண்டுக்கல் அணியானது 2 போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடாத அஸ்வின் தற்போது இந்திய அணி வீரர்கள் குறித்து பேசியுள்ள ஒரு விடயம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வகையில் அஸ்வின் கூறியதாவது :

Ashwin

எல்லோருமே சக ஊழியர்களாக இருக்கும் காலம் இது. ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போது அணியில் உள்ள அனைவரும் நண்பர்களாக இருந்தோம். ஆனால் இப்போது சக ஊழியர்கள் போன்று ஏதோ ஒரு வேலைக்கு வரும் நபர்களைப் போன்று வீரர்கள் பழகி வருகிறார்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

- Advertisement -

மேலும் ஒவ்வொரு வீரர்களும் தங்களது முன்னேற்றத்தை மட்டுமே கணக்கில் வைத்து விளையாடுகிறார்கள். அவர்களின் அருகில் இருக்கும் நபர்களின் முன்னேற்றத்தை யாரும் பார்ப்பது கிடையாது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : உண்மையில் கிரிக்கெட்டை பற்றி நீங்கள் நிறைய பகிர்ந்து கொண்டால் தான் உங்களுடைய திறனும் வளரும் என்று நான் நம்புகிறேன்.

இதையும் படிங்க : தப்பா நினைக்குறாங்க, எனக்கு இந்தியாவின் கேப்டன்ஷிப் கிடைக்காதற்கு அது தான் காரணம் – அஸ்வின் ஆதங்க பேட்டி

ஒரு வீரர் மற்றொரு வீரருக்கு சில அனுபவங்களை பகிரும் போது தான் உங்கள் ஆட்டம் மேம்படும். ஆனால் தற்போது அணியில் உள்ள வீரர்கள் தனிமையாக பயணிக்கின்றனர். சில சமயங்களில் கிரிக்கெட் மிகவும் சுயமாக கற்றுக் கொள்ளப்பட்ட விளையாட்டு என்பதை மறந்து விடுகிறோம் என அஸ்வின் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement