
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று பல ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த 2024 ஐபிஎல் தொடரே அவருக்கு கடைசி தொடர் என்று அனைவராலும் பேசப்பட்ட வேளையில் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவதாக தோனி அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சிஎஸ்கே அணியில் அவரை அந்த அணியின் நிர்வாகம் அன் கேப்டு வீரராக நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.
தற்போது 43 வயதை எட்டியுள்ள அவர் முன்பு போன்று அதிரடியாக விளையாட முடியாமலும், பின் வரிசையில் தாமதமாக களமிறங்குவதும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தோனி தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் தோனி 35 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும் அப்படி அவர் எடுக்காமல் விட்ட அந்த முடிவு தற்போது சிஎஸ்கே அணிக்கு பாதகமாக அமைந்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஒரு அதற்கு நானே சரியான உதாரணம். ஒரு விக்கெட் கீப்பராக அதிகபட்சம் விளையாட வேண்டிய வயது 35 தான்.
அதன்பிறகு நாம் உச்சகட்டத்தில் விளையாடவில்லை என்றால் இளம் தலைமுறையினரிடம் போட்டி போட முடியாது. என்னை பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலேயே தோனியால் இந்திய அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே அவர் அப்போதே அதை புரிந்து கொண்டு ஓய்வை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வீரருக்காக ஒரு அணியை கீழே விடுவது நியாயம் கிடையாது.
இதையும் படிங்க : நெஹ்ரா போட்ட பிளான்.. உள்ளே வந்த தமிழக வீரர்.. எதிர்பாரா சர்ப்ரைஸ் – விவரம் இதோ
சிஎஸ்கே அணி தோனியை மட்டும் கொண்டாடுகிறது. ஆனால் தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் கடைசி நிலையில் இருக்கிறார்கள் சிஎஸ்கே அணி கடைசியாக விளையாடிய சில ஆட்டங்களை நான் பார்த்தேன் அதில் தோனி வரும்போது சத்தம் அதிகளவு இருக்கிறது. அதைத்தவிர போட்டியில் ஒன்றும் இல்லை என அவர் காட்டமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.