நெஹ்ரா போட்ட பிளான்.. உள்ளே வந்த தமிழக வீரர்.. எதிர்பாரா சர்ப்ரைஸ் – விவரம் இதோ

Nehra
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் மூன்று வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன் படி நேற்றைய பெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

வாஷிங்டன் சுந்தருக்கு உறுதுணையாக நின்ற ஆஷிஷ் நெஹ்ரா :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 31 ரன்களையும், கிளாஸன் 27 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 16.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சுப்மன் கில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அதேபோன்று தமிழக வீரராக வாஷிங்டன் சுந்தர் நான்காவது வீரராக களம் புகுந்து 29 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 49 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் பந்துவீசாத வேளையில் பேட்டிங்கில் நான்காவது வீரராக களமிறங்க என்ன காரணம்? என்பது குறித்தும் அதற்கு பின்னால் ஆஷிஷ் நெஹ்ரா எவ்வாறு உதவியுள்ளார் என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டி நடைபெற்ற இந்த மைதானத்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை என்றாலும் நிச்சயம் அவரால் பேட்டிங்கில் கை கொடுக்கவும் முடியும் என்று நம்பிய ஆஷிஷ் நெஹ்ரா அவரை குஜராத் அணி 16 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது மேலும் விக்கெட்டுகளை சரிாமல் பார்த்துக் கொள்வதற்காக வாஷிங்டன் சுந்தரை அனுப்ப முடிவு செய்தார்.

இதையும் படிங்க : தோனிக்கு எதிரா எங்களோட பவுலிங் பிளான் இதுதான்.. இதை பண்ணா போதும் – யுஸ்வேந்திர சாஹல் பேட்டி

அவர் அனுப்பிய படியே மிகச்சிறப்பாக பேட்டிங் செய்த வாஷிங்டன் சுந்தர் சுப்மன் கில்லுனுடன் இணைந்து 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு சேர்த்து வேகமாக 49 ரன்களையும் குவித்ததால் அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக குஜராத் அணி வெற்றியும் பெற்றது. இப்படி சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை யாரும் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் வீரராக நான்காவது இடத்தில் களமிறக்கிய நெஹ்ராவின் இந்த யோசனைக்கு பாராட்டுக்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement