கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
தோனிக்கு எதிரான தனது திட்டம் பற்றி பேசிய : யுஸ்வேந்திர சாஹல்
அதற்கடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது நாளை ஏப்ரல் 8-ஆம் தேதி பஞ்சாப் அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் சென்னை அணிக்கு எதிரான இந்த போட்டியில் பங்கேற்க இருக்கும் பஞ்சாப் அணியும் தற்போது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங்கிற்கு வந்தால் எப்படி திட்டங்களை அமைக்க வேண்டும் என்று பஞ்சாப் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் பந்துவீசுவதை ஸ்டம்புக்கு பின்னால் இருந்து தோனி பல ஆண்டுகளாக பார்த்திருக்கிறார்.
எனவே நான் எப்படி பந்து வீசுவேன்? எப்படி பந்துவீசினால் சரியாக இருக்கும் என்று எல்லாம் அவருக்கு தெரியும். ஆனால் அவர் பேட்டிங் செய்யும்போது நான் அவருக்கு எப்படி பந்து வீசப்போகிறேன் என்பது எனக்கு முழுவதுமாக தெரியாது. ஆனால் தோனி முதல் பத்து ஓவர்களுக்குள் பேட்டிங் செய்ய வந்தால் அவருக்கு எதிராக பந்துவீச்சில் தாக்குதலை தொடுக்க வேண்டும்.
அப்படி முன்கூட்டி வராமல் கடைசி நேரத்தில் வந்தால் அவருக்கு எதிராக எளிதான பந்துகளை மட்டும் வீசக்கூடாது. ஏனெனில் கடைசி நேரத்தில் அவர் எளிதான பந்துகள் கிடைத்தால் வெளியே அடித்து விடுவார். எனவே அவருக்கு எதிராக கட்டுகோப்பான முறையில் பந்துவீச வேண்டியது அவசியம். இதை மட்டும் செய்தாலே தோனியை கட்டுக்குள் வைக்கலாம்.
இதையும் படிங்க : இந்த உண்மையை ஒப்புக்கொண்டு தோனி வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது – மேத்யூ ஹைடன் ஓபன்டாக்
ஷ்ரேயாஸ் ஐயர் எனக்கு நீண்ட கால நண்பர். அவர் எனக்கு நிறைய சுதந்திரம் தருகிறார். எதிரணி எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அவர் ஒருபோதும் அஞ்சியது கிடையாது. அவரது தலைமையின் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி என யுஸ்வேந்திர சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.



