இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதல் நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று தோல்விகளை பெற்று இந்த தொடரின் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
தோனி வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது : மேத்யூ ஹைடன்
அதோடு புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து அடுத்ததாக ஏப்ரல் 8-ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. சென்னை அணி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே அடைந்துள்ள இந்த சரிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விகளுக்கு தோனியின் மெதுவான இன்னிங்ஸும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பின் வரிசையில் களமிறங்கும் அவர் அதிரடியாக விளையாடாமல் பேட்டிங்கில் ஏமாற்றத்தை அளித்து வருவதால் அவரது மோசமான செயல்பாடும் சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்று பலரும் குறை கூறிவருகின்றனர்.
அதோடு தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் : தோனி தற்போது ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என நேரடியாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
தோனி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த போட்டிக்கு பிறகு அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு வர்ணனையாளர் குழுவினருடன் வந்து இணைய வேண்டும்.
இதையும் படிங்க : சொந்த மைதானத்தில் வைத்து பெஸ்ட் ஸ்பெல்லுடன் செஞ்சுரி அடித்த முகமது சிராஜ் – அசத்தல் சாதனை
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது என்று நேரடியாகவே விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனம் தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



